பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நடத்தி வைத்தார்!
காஞ்சிபுரம், ஏப்.20 காஞ்சி மிசா டி.ஏ.கோபாலன் சகோதரர் டி.ஏ.ஜோதியின் மகன் ஜோதி இளங்கோவன் – உதயராணி ஆகியோர் மகள் டாக்டர் சூர்யா கலா, சென்னை பூவிருந்தவல்லி ராஜூ – நாகவல்லி இணையரின் மகன் டாக்டர் அனீஸ் ராஜ் என்கிற வெங்கடேசன் ஆகியோரின் மணவிழா 18.4.2024 அன்று காலை 9 மணி அளவில் காஞ்சிபுரம் எஸ்.வி மகாலில், மாவட்ட திமுக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தலைமையில், மாநில திமுக மாணவரணி செயலாளர் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மருத்துவர் ராமர் டி.ஏ.ஜி. பொய்யாமொழி, டி.ஏ.ஜி.அன்பழகன், ஆர்.ஜே.அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் உறுதிமொழி கூறி, மணவிழாவினை நடத்தி வைத்தார்.
நிகழ்வில் டாக்டர் விமணாமூர்த்தி, ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், குமணன், ஆறுமுகம், கணபதி, குமார், மாவட்டத் தலைவர் முரளி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன் ஆகியோர் பாராட்டுரை வழங் கினர்.
காஞ்சி மாவட்ட கழக காப்பாளர் டி.ஏ.ஜி.அசோகன் வரவேற்புரை ஆற்றினார். காஞ்சி நகர திமுக மேனாள் செயலாளர் சி.வி.எம்.ஏ.சேகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாவட்ட செயலாளர் இளையவேல், வேலாயுதம், கா.சேகர், ஜீன மோகன், காஞ்சி அருண் மற்றும் தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். நிறைவாக பொன்மகள் நன்றி கூறினார்.