கொஹீமா, ஏப். 20- நாகாலாந்து மாநி லத்தின் மான், தியுன்சாங், லாங் லெங், கிபயர், ஷமதோர் மற்றும் நாக்லக் ஆகிய ஆறு மாவட்டங் களில் ஒரு வாக்கு கூட பதிவாக வில்லை. தனி மாநிலம் கோரி கிழக்கு நாகாலாந்து மக்கள் இயக் கம் (ணிழிறிளி) எழுப்பிய கோரிக்கையை ஏற்று அந்த பகுதியைச் சேர்ந்த அனைத்து பழங்குடி மற்றும் மலை வாழ் மக்கள் நேற்று (19.4.2024) நடைபெற்ற தேர்தலை முழுமை யாக புறக்கணித் துள்ளனர்.
60 சட்டமன்ற உறுப்பினர்க ளைக் கொண்ட நாகாலாந்து சட்டமன்றத்தில் 20 உறுப்பினர் களைக் கொண்ட இந்த பகுதிக்கு வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவ தாக ணிழிறிளி கூறிவருகிறது. எல்லை யோர மாவட்டங்களை பிரித்து எல்லை நாகாலாந்து என்ற பெய ரில் தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்று 2010 முதல் இந்த பகுதி மக்கள் போராடி வருகின்ற னர். இந்த நிலையில் 2024 நாடா ளுமன்ற தேர்தலில் இந்த 6 மாவட் டங்களில் உள்ள 20 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஒருவர் கூட நேற்று பிற்பகல் வரை வாக் களிக்க வராதது பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.