புதுடில்லி, ஏப். 20- தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமின்றி ராஜஸ்தான் 12, உத்தரப் பிரதேசம் 8, மத்தியப் பிரதேசம் 6, மகாராட்டிரா, அசாம், உத்தராகண்ட் தலா 5, பீகார் 4, மேற்கு வங்கம் 3, மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலச் பிர தேசம் தலா 2, சத்தீஸ்கர், காஷ்மீர், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், லட்சத்தீவு, அந்தமானில் தலா ஒரு மக்களவை தொகுதி என நாடு முழுவதும் மொத்தம் 102 மக்களவை தொகுதிகளில் நேற்று (19.4.2024) வாக்குப்பதிவு நடை பெற்றது.
மேற்கு வங்கத்தின் கூச் பெகர் பகுதி வாக்குச்சாவடியில் பணியில் இருந்த ஆயுதப் படை வீரர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கூச் பெகர் தொகுதிக்கு உட்பட்ட துபான்கஞ்ச் பகுதி வாக்குச் சாவடி யில் பாஜக – திரிணமூல் தொண் டர்கள் இடையே ஏற்பட்ட மோத லில் பலர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்பில் வீரர் உயிரிழப்பு:
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கல்காம் பகுதியில் வாக்குச்சாவ டிக்கு 500 மீட்டர் தொலைவில் குண்டு வெடித்ததில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். பஸ்தர் தொகுதியின் சிக்கா பகுதியில் குண்டு வெடித்ததில் சிஆர்பிஎப் துணை கமாண்டர் படுகாயம் அடைந்தார். நாகாலாந்தின் குறிப்பிட்ட6 மாவட்டங்களை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அந்த 6 மாவட்டங்களில் நேற்று ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.
முதல்கட்ட தேர்தலில் நேற்று மாலை 6 மணிநிலவரப்படி 63 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக திரிபுராவில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. பீகா ரில் 48 சதவீத வாக்குகள் பதிவாகின.
அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தல் நேற்று அமைதியாக நடைபெற்றது.