“குழி பறிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்” – புத்தக வெளியீடு

2 Min Read

சென்னை, ஏப். 19- தற்போதைய குடி யுரிமை திருத்தச்சட்டத்தை அமல் படுத்தினால், ஏராளமானோர் நடுத்தெருவில் நிற்க வேண்டியதாக இருக்கும் என, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி தெரிவித்துள்ளார்.
சென்னை புதுக்கல்லூரி வர லாற்றுத் துறை இணை பேராசிரி யர் ரசித்கான் எழுதிய, “குழி பறிக் கும் குடியுரிமை திருத்தச் சட்டம்” என்ற நூல் வெளியீட்டு விழா, கல்லூரி வளாகத்தில் நடந்த து. சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி, நூலை வெளியிட்டு பேசியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டம் பல சந்தேகங்களை எழுப்புகிறது. அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, 1950இல் 5 ஆண்டுகளுக்கு முன் வரை இந்திய எல்லைக்குள் பிறந்த ஒவ்வொருவரும் இந்திய குடி மக்கள் என கூறுகிறது. 1955இல் இந்திய குடியுரிமை சட்டம் வந்தது. பல திருத்தங்கள் நாட்டில் வந்தி ருக்கின்றன. தற்போதைய சட்ட திருத்தம் பல சிக்கல்களை ஏற் படுத்தும்.
அண்டை நாடுகளில் இருந்து வந்தஇஸ்லாமியர் தவிர மற்ற அனைவரும் இந்தியாவில் குடி யேறி இருந்தால் அவர்கள் சட்ட விதிகளை மீறி குடியேறியவர்கள் அல்ல என்று குடியுரிமை திருத்தச் சட்டம் கூறுகிறது. அதில் இஸ்லா மியர்கள் சேர்க்கப்படவில்லை.

காங்., ஆட்சியில் முதலில் வெளியான என்.பிஆர், எனப்படும் தேசிய மக்கள் பதிவேட்டில், இந்தியாவில் வசிக்கும் அனைவரும் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் என்பதை உறுதி செய்த து. ஆனால், 2019இல் பாஜ ஆட்சிக்கு வந்தபின் அதில் மதம், பெற்றோர் இந்திய குடியுரிமை பெற்றவர்களா, அதற் கான ஆதாரம் என்ன என்ற பகுதி கள் எல்லாம் சேர்க்கப்பட்டன. அப்படி நிரூபிக்க முடியாவிட்டால் சிக்கல் எழும்.
இந்த சட்டத்தை அமல்படுத்தி னால் பல பேர் நடுத்தெருவில் நிற் கக் கூடும். வம்சாவளியினர் இந்தி யர் என்பதை நிரூபிக்க வேண்டும்.

இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர் கள், இன்றளவும் அகதிகளாகவே உள்ளனர். இந்திய குடியுரிமை வழங்கவில்லை. இஸ்லாமியர்களுக் கும் மறுப்பு; இலங்கை தமிழர்க ளுக்கும் மறுப்பு.
இந்தியாவில் பிறந்த ஒவ்வொ ருவரும் இந்தியர்களே. இவர்களை சந்தேகப்படுவது சரியல்ல. வம்சா வளி அடிப்படையில்
குடியுரிமை ஆதாரம் கேட்பதை எதிர்க்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம், ஏதோ இஸ்லா மியர்களுக்கும், இலங்கை தமிழர் களுக்கும் மட்டுமே பாதிப்பை ஏற் படுத்தும் என நினைக்க வேண் டாம். அனைவரையுமே பாதிக்கும். இவ்வாறு கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *