சென்னை, ஏப்.19 கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவல் கண்டறியப் பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அத்தகைய பாதிப்பு இல்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித் துள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழையில் உள்ள பண்ணைகளில் வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகள் தொற்றுக் குள்ளாகி இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எச்5என்1 எனப் படும் அந்த பறவைக் காய்ச்சல் தமிழ் நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது: பறவைக் காய்ச்சலுக்குள் ளான வாத்துகள், கோழிகள், பிற பறவையினங்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக, அதன் கழிவுகளில் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பாதிப்பு பரவக்கூடும்.
காய்ச்சல், தலைவலி, தசைப் பிடிப்பு, இருமல், மூச்சு திணறல் போன்றவை பறவை காய்ச்சலுக்கான அறிகுறியாக உள்ளது. தமிழ்நாட்டில் அத்தகைய பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. இருந்தபோதிலும், கால்நடை துறை யுடன் இணைந்து பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இவ்வகை தொற்றால் பாதிக்கப்படும் பறவைகள் குறித்தும், அதன் வாயிலாக மனிதர்களுக்கு காய்ச் சல் பரவினால், அது குறித்தும் சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. எனவே, மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்தனர்.
இஸ்ரேலுக்கு தொழில் நுட்ப உதவியா?
எதிர்த்து போராடிய 28 ஊழியர்களை நீக்கியது கூகுள்
கலிபோர்னியா, ஏப்.19 நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் மற்றும் அமேசான் நிறுவனம் இஸ்ரேல் அரசுக்கு ஏஅய் மற்றும் கிளவுட் தொழில்நுட்ப சேவை வழங்குவது தொடர்பாக 1.2 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் மேற் கொண்டுள்ளது. பாலஸ்தீனம்மீது இஸ்ரேல் போர்த் தாக்குதல் நடத்தி வருகிற நிலையில், இஸ்ரேல் ராணுவத் துக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவிகள் வழங்குவது நியாயமற்றது என்று கூறி, இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக கூகுள் ஊழியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 16.4.2024 அன்று நியூயார்க், கலிபோர்னியாவில் உள்ள கூகுள் அலுவலகங்களில் சில ஊழியர்கள் 10 மணி நேரத்துக்கு மேல் மறியல் செய்தனர். கூகுள் நிறுவனத்தின் புகாரையடுத்து போராட்டத்தில் ஈடு பட்டவர்களில் 9 பேரை காவல் துறை கைது செய்தது.
இந்நிலையில், மறுநாள் 17.4.2024 அன்று கூகுள் நிறுவனம் அதன் 28 ஊழியர்களை நீக்கியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் பன்னாட்டு பாதுகாப்புப் பிரிவின் தலைவர் கிரிஸ் ராக்கோ இது குறித்து ஊழி யர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், “நிறுவனத்துக்கு எதிராக போராட் டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தப் போராட்டத்தில் தொடர்புடைய 28 பேர் நிறுவனத்திலிருந்து நீக்கப்படுகின் றனர். இத்தகைய செயல்பாடுகளை கூகுள் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது” என்று குறிப்பிட்டுள்ளார்.