கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தாக்கு
திருவனந்தபுரம், ஏப்.19 கேரள மாநிலம் பாலக்காடு தொகுதியில் போட்டியிடும் இடதுசாரி கூட் டணி வேட்பாளர் விஜயராகவனை ஆதரித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரச்சாரம் செய்தார். கோட்டை மைதானத் தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: பாலக்காடு மக்களுக்கு எத்தனையோ பிரச் சினைகள் உள்ளன. ஒன்றிய அரசு அதையெல்லாம் கண்டு கொள்வது இல்லை. பாலக்காட்டில் எய்ம்ஸ் கொண்டு வருவோம் என்று கூறி பல ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும் நீண்ட காலமாக கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. பெமல் உள்பட பாலக்காட்டில் இயங்கி வரும் நிறுவனங்களை தனியார் மயமாக்க முயற்சிக்கின் றனர். அதை கேரள அரசிடம் ஒப்படைக்க மறுக்கின்றனர். இந்த நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என்று இடதுசாரி கூட் டணி மட்டும் தான் போராட்டம் நடத்தியது. கேரளா எந்த வகை யிலும் முன்னேறக் கூடாது என்பதுதான் மோடியின் திட்டமாகும்.
பிரதமர் மோடி கேரளாவுக்கு வரும்போது எல்லாம் வாக் குறுதிகளை அள்ளி வீசி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றினார் என்று அவரால் கூற முடியுமா? கேரளாவில் கூட்டுறவுத்துறை இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்குகிறது. ஆனால் அதை குறை கூறி கூட்டுறவுத் துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம் பிக்கையை கெடுக்க மோடி முயற் சிக்கிறார். யார் நினைத்தாலும் கேரள மக்களுக்கு கூட்டுறவுத் துறையின் மீது இருக்கும் நம்பிக் கையை தகர்க்க முடியாது. இவ் வாறு அவர் பேசினார்.