அக்கம் பக்கம் அக்கப்போரு…

2 Min Read

“ஃபில்டர் காபியா? இது ப்ரூம்மா!”

நியூஸ் வீக் ஆங்கில இதழ் எழுதிக் கொடுத்தனுப் பிய கேள்விகளுக்குப் பதில் தயாரித்துத் தந்ததற்குப் பிறகு, 90 நிமிடங்கள் அதன் ஆசிரியர் குழுவுடன் பேசிக் கொண்டிருந்த நரேந்திர மோடி,
தொடக்கத்திலேயே அதன் க்ளோபல் சீப் எடிட்டர் நான்சியிடம், தான் அணிந்திருக்கும் மேலா டையைத் தொட்டுப் பாருங்கள் என்று அழைத் தாராம். என்ன நடந்தது என்று தினமலர் (13.4.2024, பக்.4) எழுதியுள்ளதைக் கீழே படியுங்கள்:
“நான்சி தொட்டுப் பார்த்தார். “இது என்ன மெட்டீரியல் என்று சொல்லுங்கள், பார்ப்போம்” என்றார் பிரதமர்.
“சில்க் என்று நினைக்கிறேன்” இது நான்சி.
கடகடவென்று சிரித்தார் மோடி. “இப்படித்தான் பலரும் நினைக்கிறார்கள். நான் விலை உயர்ந்த ஆடம்பரமான உடை அணிபவன் என்று. உண்மை யில் இது நீங்கள் தண்ணீர் குடித்துவிட்டு தூக்கி எறிந்த பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு நெய்யப்பட்ட ஜாக்கெட்” என்று விளக்கினார்.

புளகாங்கிதப்படுகிறது தினமலர்!
இந்தப் பேட்டியின் போது அவர் உடுத்திய ஜாக்கெட் உடை இந்தியன் ஆயில் நிறுவனம், கடந்த ஆண்டு நடத்திய மாநாடு ஒன்றின் போது வழங்கிய மறுசுழற்சி செய்யப்பட்ட நேரு ஜாக்கெட் தான். இதற்கு முன்பு ஒரு முறை நாடாளுமன்றத்திற்கு வரும்போது மோடி உடுத்தியிருக்கிறார். பிறகு ஜி20 மாநாட்டுக்குச் செல்லும்போது வேறு வண்ணத்தில் இதே போன்ற ஜாக்கெட் அணிந்தார். எப்போ தெல்லாம் அவர் அணிகிறாரோ, அப்போதெல்லாம் ஊடகங்களில் அது செய்தி ஆக்கப்படும்.
இப்போதும் அதுதான்.
நியூஸ்வீக் கேட்காத ஒரு விஷயத்திற்கு இவ் வளவு முக்கியத்துவம் கொடுத்து மோடி சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?
ஆடம்பர உடை அணிபவர் என்ற பெயர் சும்மாவா வந்தது?
2015- ஜனவரி 26 அன்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வந்தபோது, ஒரே நாளில் மூன்று வெவ்வேறு உடைகளில் வந்து அசத்தினார் மோடி என்று அமெரிக்க ஊடகங்களே ‘வியந்து’ எழுதின.

ஒபாமாவுக்கு விருந்தளித்த போது அவர் அணிந்திருந்த பந்த்காலா சூட்டில் (Bandhgala Suite), அவரின் முழுப் பெயரான NARENDRA DAMODARDAS MODI  என்று தங்கம் போல் ஜொலிக்கும் நூலிழையால் நெய்யப்பட்ட பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள உடையை அணிந்திருந் தார்.

பின்னர் அந்த உடை ஏலம் விடப்பட்டது. சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி லால்ஜி பட்டேல் என்பவர் ரூ.4.31 கோடிக்கு அந்த உடையை ஏலத்தில் எடுத்தார். 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் “உலகின் அதிகமான விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட உடை” என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
2015 செப்டம்பர் மாதத்தில் அமெரிக்கா சென்ற போது ஒரே நாளில் நான்கு வகையான உடைகளை அணிந்து அமெரிக்கர்களை அதிசயிக்க வைத்தார் மோடி. அதன் பிறகும், ஊர் ஊருக்கு அவர் அணிந்துவந்த உடைகளும், மேலாடைகளும், தொப்பிகளும் அவர் ‘எளிமை’யின் சின்னம் என்றா உணர்த்தும்?

அதனால் தான் நியூஸ்வீக் ஆசிரியர் குழுவைச் சந்திக்கும்போது, ரூ.2000 மதிப்புள்ளதாக விளம்பரப் படுத்தப்பட்ட மறு சுழற்சி ஆடையை அணிந்துவந்து, அதையும் அவர்கள் கண்டுகொள்ளாத போது, தொட்டுப் பார்க்கச் சொல்லி, “இது பில்டர் காஃபி இல்லை.. ‘ப்ரு’ம்மா!” என்ற விளம்பரச் சிரிப்பு சிரித் திருக்கிறார் பிரதமர் மோடி.

– குப்பைக் கோழியார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *