புதுடில்லி, ஏப்.17- ஓட்டுப்பதிவு எந்திரத்தை தவறாக கையாளும் அதிகாரிகளுக்கு என்ன தண் டனை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி விடுத்தது.
ஒப்புகை சீட்டுகள்
தேர்தல்களின்போது வாக்குச் சாவடிகளில் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரத்துடன், ‘விவிபாட்’ என்ற ஒப்புகை சீட்டு எந்திரமும் வைக்கப் பட்டு இருக்கும். வாக் காளர் ஓட்டுப் பதிவு செய்தவுடன், எந்த சின்னத்தில் ஓட்டு பதி வாகி இருக்கிறது என்பதை ஒப்புகை சீட்டு எந்திரத்தில் இருந்து வெளி வரும் ஒப்புகை சீட்டில் பார்க் கலாம்.
ஆனால், மொத்த ஒப்புகை சீட்டு எந்திரங்களில் வெறும் 2 சத வீத எந்திரங்களில் பதிவான ஒப் புகை சீட்டுகள் மட்டுமே எண்ணப் படுகின்றன.
இதற்கிடையே, அனைத்து ஒப் புகை சீட்டுகளையும் எண்ணி, ஓட்டுப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் சரிபார்க்க உத்தர விடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் உள் பட 3 அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.
ஓட்டுச்சீட்டு முறைக்கு திரும்ப முடியாது
இந்த மனுக்கள், நீதிபதி சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (16.4.2024) விசாரணைக்கு வந்தன.அப்போது, ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் கூறியதாவது:-
பழைய பாணியில் ஓட்டுச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண் டும் அல்லது அனைத்து ஒப் புகை சீட்டுகளும் எண்ணப்பட்டு சரிபார்க் கப்பட வேண்டும். -இவ்வாறு அவர் கூறினார்.
அதற்கு நீதிபதிகள் கூறியதாவது:-
ஓட்டுச்சீட்டு மூலம் தேர்தல் நடந்தபோது என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். நீங்கள் மறந்திருக்கலாம். நாங்கள் மறக்கவில்லை.
மனித தலையீடு
தேர்தல் முறையை சந்தேகப்படக் கூடாது. நம்பிக்கை வைக்க வேண் டும். வாக்குப்பதிவிலும், வாக்கு எண்ணிக் கையிலும் மனித தலையீடு இருந்தால் தான் பிரச்சினைகளும், பாரபட்சமும் ஏற்படும். மனித தலையீடு இல்லாவிட் டால், துல்லியமான முடிவுகள்தான் வரும். மென்பொரு ளிலோ அல்லது எந்திரத்திலோ யாரா வது மாற்றங்கள் செய்தால், பிரச்சினை ஏற்படும் என் பது உண் மைதான். இதை தவிர்க்க ஏதேனும் யோசனை இருந்தால் நீங்கள் தெரிவிக்கலாம். -இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
அதற்கு வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், ஜெர்மனியை உதாரணமாக கூறினார். நீதிபதி திபங்கர் தத்தா, ஜெர்மனியின் மக்கள்தொகை என்ன என்று கேட்டார். வழக்குரை ஞர் பிரசாந்த் பூஷண், 5 அல்லது 6 கோடி இருக்கலாம்” என்று கூறினார்.
உடனே நீதிபதி திபங்கர் தத்தா, “நான் பிறந்த மேற்கு வங்காளத்தின் மக்கள் தொகை இதைவிட அதிகம். இதுபோல் தேர்தல் முறையை சீர் குலைக்க முயற்சிக்காதீர்கள்” என்று கூறினார்.
என்ன தண்டனை?
மேலும், “மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை தவறாக கையாளும் அதிகாரிகளுக்கு ஏதேனும் தண் டனை உண்டா?.” என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி விடுத்தனர். “கடுமையான தண்டனை கிடைக்கும் என்ற பயம் இல்லா விட்டால், தவறாக கையாள வாய்ப்பு ஏற்படும்” என்றும் கூறினர்.
அதற்குதேர்தல் ஆணையத்தின் வழக்குரைஞர், “அலுவல் விதிமீறலுக் கான தண்டனை உள்ளது” என்று கூறி னார். உடனே நீதிபதிகள், “தவறாக கையாள்வதற்காக விசேஷ சட்டப் பிரிவு இல்லையா?” என்று கேட்டனர். அடுத்தகட்ட விசார ணையை 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.—