புதுடில்லி, ஏப்.15- பா ஜனதா தேர்தல் அறிக்கையில் வேலையில்லா திண்டாட்டம். விலைவாசி உயர்வை தடுக்க எதுவும் கூற வில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை மத்தியில் ஆளும் பாஜனதா நேற்று (14.4.2024) வெளியிட்டது. தீர்மான பத்திரம் என்றபெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட் டுள்ளன. பா.ஜனதாவின் இந்த தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குறைகூறியுள்ளன.
அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் களான பவன்கெரா, சுப்ரியா சிறீதாட் அமிதாப் துபே ஆகியோர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
வாக்குறுதியை நிறைவேற்றவில்லை
பா.ஜனதாவின் தீர்மான பத்திரத்தை மன்னிப்பு கடிதம் என்றுதான் அழைக்க வேண்டும். ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசு எந்த வாக்குறுதி யையும் நிறைவேற்றவில்லை.
கருப்பு பணத்தை மீட்க சிறப் புக்குழு அமைப்பதாக மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அதற்கு பதிலாக தேர்தல் பத்திரம்தான் கொண்டு வரப் பட்டது. வட கிழக்கு மாநிலங் களில் சட்டம்-ஒழுங்கு வலுப்படுத் தப்படும் என கூறியிருந்தார். ஆனால் மணிப்பூரில் வன்முறை தொடர்வதுடன், மோடியும் அமைதி காத்து வருகிறார். நாடு முழுவதும் 200 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் இந்திய எல்லைக்குள் சீனா தான் ஸ்மார்ட்கிராமங்களை உருவாக்கி இருக்கிறது.
மன்னிப்பு கேட்க வேண்டும்
இவ்வாறு எந்த வாக்குறுதி யையும் நிறைவேற்றாததற்காக நாட்டின் தாழ்த் தப்பட்டோர் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பழங்குடியினரிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் வேலை வாய்ப்பு குறித்து வெறும் 2 இடங்களில் மட்டுமே கூறப் பட்டு இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் 30 லட்சம்அரசு வேலைகள், ரூ. 1 லட்சம் உதவித் தொகையுடன் பழகுநர் பயிற்சியை அறிவித்திருந்தோம்.
மணிப்பூர் விவகாரம், சீன ஆக்கிரமிப்பு, விவசாயிகளின் வகுமான இரட்டிப்பு, குறைந்த பட்ச ஆதரவு விலை, விலைவாசி உயர்வு. பெண்களின் பிரச் சினைகள் குறித்து எதுவும் கூறப் படவில்லை. இவ்வாறு அவர்கள் குற்றம் சாட்டினர்.
தேஜஸ்வி யாதவ்
ராஷ்ட்ரிய ஜனதாதன தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில்,’பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் வேலை வாய்ப்பு குறித்து எங்கேயும் இல்லை. வறுமை மற்றும் விலை வாசியை குறைப்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. 60 சதவீத இளைஞர்களுக்கு, 80 சதவீத விவசாயிகளுக்கு மற்றும் கிராமங்களுக்கும் எதுவும் இல்லை. அவற்றை எல்லாம் அவர்கள் விட்டுவிட்டனர். உண்மை யில், மக்களுக்கு கொடுப்ப தற்கு அவர்களிடம் எதுவும் இல்லை என்ப தையே இது காட்டுகிறது’ என்று சாடி னார்.
பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை மாநிலங்கள் மீதான பா.ஜனதா தலை வர்களின் மனநிலையை இந்த தேர்தல் அறிக்கை அம்பலப்படுத்தி இருப் பதாக கூறிய தேஜஸ்வி யாதவ், பீகார் போன்ற ஏழை மாநிலங் களை மேம்படுத்த அதில் எதுவும் இல்லை என்றும் கூறினார்.
பொய் பத்திரம்
இதைப்போல பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை வெறும் பொய் பத்திரம் என ஆம் ஆத்மி சாடியுள்ளது.
இது தொடர்பாக கட்சி யின் மூத்த தலைவர் அதிஷி கூறும் போது,
‘இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2கோடி வேலைவாய்ப்புகளை பிரதமர் மோடி வாக்களித்து இருந்தார். ஆனால் இந்த பொய் பத்திரத்தில் அது குறித்து எந்த தரவுகளும் இல்லை. ஒவ்வொரு குடும்பமும் தங்கள் தேவையை நிறைவேற்ற பெரும் இடையூறு களை எதிர் கொள்கின்றன. எனவே பா.ஜனதாவின் இந்த பொய் பத்திரத்தை யாரும் நம்ப மாட்டார்கள்’ என தெரிவித்தார்.