13.4.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், அரசுத் துறையில் நிரப்பப்படாமல் உள்ள 30 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம் – ராகுல் உறுதி.
* தோல்வி பயத்தின் காரணமாக பிரதமர் மோடி அடிக்கடி தென் மாநிலங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிறார் – மல்லிகார்ஜூனா கார்கே தாக்கு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* கொங்கு மண்டலத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக ஆதரவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இது. மோடியின் அரசு அல்ல, அதானியின் அரசு – ராகுல் கிண்டல்.
* உ.பி.யில் சமாஜ்வாதி கட்சிக்கு ஆம் ஆத்மி ஆதரவு. சஞ்சய் சிங், அகிலேஷிடம் உறுதி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தூத்துக்குடி வெள்ள நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்த திமுக வேட்பாளர் கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
தி டெலிகிராப்:
* வேலை கிடைக்காமல் தவிக்கிறோம்: மோடி ஆட்சியில் ஊழல் அதிகம் – விலைவாசி உயர்வை தாங்க முடியல; கருத்துக்கணிப்பில் பொதுமக்கள் அதிருப்தி
டைம்ஸ் ஆப் இந்தியா:
* இந்தியாவில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதை பேசாத பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை ஆராய்ந்து கொண் டிருக்கிறார் என காங்கிரஸ் குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a comment