பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவின் கடன் சுமை

viduthalai
1 Min Read

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2004-2014வரை ஒன்றிய அர சின் மொத்தக் கடன் ரூபாய் 55 லட்சம் கோடியாக இருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 58 சதவீதம். ஆனால், 2014-2024 வரை ஒன்றிய பாஜக. அரசின் மொத்த கடன் எவ்வளவு தெரியுமா? ரூபாய் 183 லட்சம் கோடி! இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 87 சதவீதம்! இதுதான் மோடி சொல்லும்

பொருளாதாரப் புரட்சி!

இதே நிலையில் போனால், இந்தியாவின் மொத்தக் கடனும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாகிவிடும். இந்தியா திவால் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதற்கு இதைவிட வேறு என்ன புள்ளிவிவரம் வேண்டும்?
மோடி பிரதமராகும் 2014க்கு முன்பு ஒவ்வொரு இந்திய குடிமகன் தலை மீதும் இருந்த கடன் ரூபாய் 43 ஆயிரம். இப்போது 2024இல் மோடியின் சூப்பர் பவர் ஆட்சியில் இந்தக் கடன் ரூபாய் 1 லட்சத்து 27 ஆயிரமாக உயர்ந்திருக் கிறது!
ஒன்றிய பாஜக அரசு எதில் சாதனை புரிந்ததோ இல்லையோ, கடன் வாங்கு வதில் வரலாறு காணாத சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதுதான் நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனின் நிதி மேலாண்மை லட்சணம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *