சென்னை,ஏப்.13- தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப் படும், அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் உட்பட ஆதிதிராவிடர், பழங்குடியினருக் கான திட்டங்கள் நாட்டுக்கே வழிகாட்டுவதாக திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினரின் ஒட்டுமொத்த வளர்ச் சியில் மிகுந்த அக்கறையுடன் செயல் பட்டு வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.
மறைந்த முதலமைச்சர் கலை ஞர் கருணாநிதி ஆட்சியில், பட்ட மேற்படிப்பு வரை இலவசப் படிப்பு, ஓலைக்குடிசைக்கு பதில் கான்கிரீட் வீடுகள் கட்ட ஆதி திராவிடர் வீட்டு வசதிக் கழகத் தைத் தொடங்கி நாட்டுக்கே வழி காட்டினார்.
ஊரின் ஒதுக்குப்புறத்தில் வாழ்ந் தவர்களை ஊரின் நடுவில் வாழச் செய்ய, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெரியார் நினைவு சமத்துவபுர குடியிருப்புகளை ஏற் படுத்தினார்.
அதேபோல், ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான இடஒதுக் கீட்டை 16-லிருந்து 18 சதவீதமாக உயர்த்தியதுடன், மலைவாழ் பழங் குடியினருக்கு ஒரு சதவீதம் தனி ஒதுக்கீடும், அருந்ததியினருக்கு 4 சதவீதம் உள் ஒதுக்கீடும் வழங் கினார்.
சென்னை உயர் நீதிமன்ற வர லாற்றில், முதல்முறையாக உயர் நீதிமன்ற நீதிபதியாக ஆதிதிராவிட ரான ஏ.வரதராஜனை, 1973இல் நியமித்தார். அவர் பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப் பட்டார்.
இந்த வரலாறுகளை பின்னணி யாக கொண்ட திராவிட மாடல் அரசு, கடந்த மூன்றாண்டுகளில் ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்ற நோக்குடன் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின ருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அம்பேத்கர் பிறந்தநாளான ஏப். 14ஆம் தேதியை சமத்துவ நாளாக அறிவித்து, உறுதிமொழி ஏற்கப்படு கிறது. அம்பேத்கர் விருதின் பரிசுத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. தமிழ் நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினருக்கான மாநில ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியின இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்ற அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத் திட்டத்தில் 65 சதவீத வங்கிக் கடனுக்கான 6 சதவீத வட்டியையும் அரசே ஏற்கிறது.
அயோத்திதாச பண்டிதர் குடியி ருப்புகள் மேம்பாட்டுத் திட்டத் தின்கீழ் ஊரகப்பகுதிகள் மட்டுமல் லாமல், நகர்ப்புறங்களிலும் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத் திட ஆண்டுதோறும் ரூ.200 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடை பெற்று வருகின்றன.
தூய்மைப் பணியாளர் நலவாரி யம் மூலம், ரூ.10 கோடிக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நரிக்குறவர் இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள் ளனர்.
ஆதிதிராவிடர், பழங்குடியின பள்ளி விடுதிகள், உண்டு உறை விடப் பள்ளிகளில் மாணவர்களுக்கு அரசு வழங்கும் உணவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
விரிவான பழங்குடியினர் மேம் பாட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் பழங்குடியினர் குடியி ருப்புகளில் ரூ.475 கோடியில் 25,262 அடிப்படை உள்கட்டமைப்பு மேம் பாட்டுப் பணிகள் மேற் கொள் ளப்பட்டுள்ளன.
திராவிட மாடல் அரசின் இது போன்ற நடவடிக்கைகளால் ஆதி திராவிட, பழங்குடியின சமுதாய இளைஞர்கள் எல்லா இடங்களிலும், பதவிகளிலும், பொறுப்புகளிலும் மற்றவர்களுக்கு இணையாக வீற்றி ருந்து பணியாற்றுகின்றனர். பொரு ளாதார நிலை, சமுதாய மதிப்பு, பெருமைகளால் உயர்ந்து சிறந்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.