ஜி.எஸ்.டி. வரியால் பாதிக்கப்பட்டு இருக்கிறோமே என்று கேட்ட பெண்ணை, பா.ஜ.க.வினர் தாக்கு!
திருப்பூர், ஏப்.12 கடந்த 2 நாள்களாக கோவை, நாகை, ராமநாதபுரம் உள்ள பகுதிகளில் ஜி.எஸ்.டி. வரியால் ஏற்படும் பாதிப்பு குறித்து கேள்வி எழுப்பியவர்களை பா.ஜ.க.வினர் தாக்கி வரு கின்றனர். திருப் பூரில், ஜி.எஸ்.டி. வரியால் பாதிக் கப்படுகிறோம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பா.ஜ.க. வேட்பாளரிடம் கேட்ட ஒரு பெண்ணை பா.ஜ.க.வினர் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.