இதற்கு முன்பு நெடுஞ்சாலை மைல் கற்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஊர்ப் பெயர்கள் இருந்தன!
தேர்தல் தேதி அறிவிக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென்று வெள்ளைப்பூச்சு அடிக்கப்பட்டது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருந்ததை அழித்துவிட்டு தமிழ் மற்றும் ஹிந்தியில் எழுதி இருக்கிறார்கள்.
கிருஷ்ணகிரி – வாணியம்பாடி இடைப்பட்ட நெடுஞ்சாலை மைல் கற்களில் இவ்வாறு காணப்படுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த சில நாள்களில் இப்படி எழுதியது. தேர்தல் வேலைகளில் மும்முரமாக இருப்பார்கள் என்று எண்ணி, இந்த நேரத்தைப் பயன்படுத்தி உள்ளனர்.
நாட்றாம் பள்ளி ஆத்தூர் குப்பம் எரிபொருள் நிலையம் அருகே ‘ஹாப்பி டிபன் சென்டர்’ அருகே, கேத்தாண்டப்பட்டி சர்க்கரை ஆலை, சர்க்கரை மூட்டை சேமிப்பகத்திற்கு எதிரே இருப்பதுதான் ஹிந்தி எழுத்துகளைக் கொண்ட இந்த மைல்கல்!