எதிர்க்கட்சிகளை தேடித்தேடி கைது செய்யும் அமலாக்கத்துறை (ED), ஊழலின் ஊற்றுக்கண்ணான பா.ஜ.க.வை சார்ந்த ஒருவரைக் கூட கைது செய்யாதது ஏன்?
1. 2019இல் எடியூரப்பாவிடம் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களில் அருண் ஜெட்லீ, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பா.ஜ.க. ஒன்றிய அலுவலக கணக்கு என பலருடன் 1800 கோடி ரூபாய் மதிப்பிலான பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக குறிப்பிடப் பட்டிருந்ததே, எடியுரப்பாவை – ED ரெய்டு செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
2. குஜராத்தில் மோடி ஆட்சியில் 750 கோடி ஊழலில் ஈடுபட்ட அமைச்சர் விபுல் சவுத்ரி-யை – ED ரெய்டு செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
3. பல கோடி டெண்டர் ஊழல் வழக்கில் ஈடுபட்ட கருநாடக பா.ஜ.க. அமைச்சர் நேரு ஓலேகரை – ED ரெய்டு செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
4. 40 பேர் பலி மற்றும் பல கோடி ஊழல் நடைபெற்ற மத்தியப் பிரதேச வியாபம் முறைகேட்டில் ஈடுபட்ட பா.ஜ.க. அமைச்சர் லக்ஷ்மிகாந்த் ஷர்மா-வை 2019இல் சிபிஅய் நீதிமன்றம் விடுவித்தது. பின்பு கரோனாவால் மரணமடைந்தார். முறைகேடு நடந்ததை நாடே அறியும். இந்த பணப் பரிமாற்றத்தை – ED விசாரிக்காதது ஏன்?
5. எடியுரப்பா கரோனா நேரத்தில் 40 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளதாக பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் பாசனகவுடா பட்டில் குற்றஞ் சாட்டினாரே, அதை – ED ரெய்டு செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
6. 2001இல் பாதுகாப்பு துறை தளவாடங்கள் வாங்குவதில் நடைபெற்ற ஊழலில் தொடர்புடைய பா.ஜ.க. தலைவர் பங்காரு லட்சுமணனை – ED ரெய்டு செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
7. பெங்களூர் மெகாசிட்டி ஊழலில் ஈடுபட்ட கருநடக பாஜக அமைச்சர் யோகேஷ்வர்-அய் ED ரெய்டு செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
8. மோடி அமைச்சரவையில், குஜராத்தில் 400 கோடி மீன்வள ஒப்பந்த ஊழல் வழக்கில் ஈடுபட்ட அமைச்சர்கள் பர்ஷோத்தம் சோலங்கி & திலீப் சங்கனி-வை – ணிஞி ரெய்டு செய்து அவர்களை கைது செய்யாதது ஏன்?
9. 103 கோடி வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய மகாராட்டிரா பாஜக தலைவர் மோகித் கம்போஜ்-அய் ED ரெய்டு செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
10. 18 கோடி சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட கருநாடக பாஜக அமைச்சர் ஜனார்த்தனன் ரெட்டி-அய் ED ரெய்டு செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
11. 2438 கோடி ஆரத்ரா நிதி மோசடி வழக்கில் ஈடுபட்ட பாஜக நிருவாகிகள் ஹரீஷ் மற்றும் ஆர்.கே.சுரேஷ்-அய் ED ரெய்டு செய்து கைது செய்யாதது ஏன்?
12. 5000 கோடி நியோமேக்ஸ் நிதி மோசடியில் ஈடுபட்ட மதுரை பாஜக பிரமுகர் வீரசக்தி-அய் ED ரெய்டு செய்து கைது செய்யாதது ஏன்?
13. விக்ராந்த் போர்க்கப்பல் பெயரில் 57 கோடி பண மோசடியில் ஈடுபட்ட மகாராட்டிரா பாஜக தலைவர் கிரித் சோமயா-வை ED ரெய்டு செய்து கைது செய்யாதது ஏன்?
14. வாஜ்பாய் தலைமையிலான பாஜக அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சராக இருந்த திலீப் ரேய் ஜார்க்கண்ட் நிலக்கரி ஊழல் வழக்கில் பல கோடி மோசடியில் ஈடுபட்டாரே – ED ரெய்டு செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
15. 1 கி.மீ. சாலை அமைக்க 250 கோடி; சுங்கச் சாவடி ஊழல் – 137 கோடி; ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 22.44 கோடி ஊழல் – இதில் சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களை ED ரெய்டு செய்து கைது செய்யாதது ஏன்?
16. ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஊழலில் முதலிடம் பிடித்துள்ளதே. இதில் ஒன்றிய அமைச்சருக்கு தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதை – ED ரெய்டு செய்து விசாரிக்காதது ஏன்?
17. ரூ.526 கோடிக்கு வாங்க இருந்த ரபேல் விமானத்தை மோடி அரசு ரூ.1,670 கோடிக்கு வாங்கியதே – இதில் முறைகேட்டில் ஈடுபட் பாஜக அமைச்சர்களை – ED ரெய்டு செய்து விசாரிக்காதது ஏன்?
18. 1.37 கோடி ஊழல் வழக்கில் ஈடுபட்ட மிசோரம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புத்ததான் சக்மா-வை – ED ரெய்டு செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
(நன்றி: “வீழட்டும் பாசிசம்! வெல்லட்டும் ஜனநாயகம்! – ஒன்றியத்தில் மலரட்டும் திராவிட மாடல் ஆட்சி!” என்ற நூலிலிருந்து. பக்கம்: 71-72)
ஊழலின் ஊற்றுக்கண் பா.ஜ.க.
Leave a Comment