சென்னை, ஏப். 5- தமிழ்நாட் டுக்கு வரும் 12ஆம் தேதி வரும் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை, திருநெல்வேலியில் பிரச்சாரம் மேற் கொள்கிறார்.
தமிழ்நாட்டில் திமுக கூட்ட ணியில் திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங் கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தமிழ் நாடு முழுவதும் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேனாள் தலைவர் ராகுல்காந்தி, தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரும் தமிழ்நாடு வந்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அதற்கான பயண திட்டத்தை வகுத்து டில்லி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில், ராகுல் காந்தி வரும் 12ஆம்தேதி தமிழ் நாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியபோது, ‘‘12ஆம் தேதி தமிழ் நாடு வரும் ராகுல் காந்தி, கோவை, திருநெல்வேலியில் பிரச் சாரம் செய்ய உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. திருநெல் வேலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.
கெஜ்ரிவால் கைது : வரும் 7ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சி பட்டினிப் போராட்டம்
புதுடில்லி, ஏப். 5- டில்லி ஆம் ஆத்மி அரசின் அமைச்சர் கோபால் ராய் நேற்று (4.4.2024) கூறியதாவது: டில்லி முதல மைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலின் கைதை கண்டித்துஆம் ஆத்மி கட்சி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஜந்தர் மந்தரில் வரும் 7ஆம் தேதி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
நாட்டு மக்களும் வீட்டிலிருந்தே இந்த பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்கலாம். இந்த போராட்டத்தை பதிவு செய்வதற்காக தொடங்கப்படும kejriwalkoashir wad.com என்ற இணையதளத்தில் மக்கள் தங்கள் பட்டினிப் போராட்டப் படங்களை பதிவேற்றலாம். தங்க ளது கருத்துகளை பகிரலாம். ஜனநாயகத்தை காப்பாற்றவும், நாட்டை நேசிப்பவர்களும் இந்த போராட்டத்தில் கைகோக்க வேண்டும். அரசியல் பாகுபாடு இன்றி அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து செய்திகளை பதி விடும் வகையில் வாட்ஸ் அப் எண்ணை கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கடந்த வாரம் தொடங்கி வைத்தார். இரண்டு நாள்களுக்குப் பிறகு அந்த வாட்ஸ்அப் எண் செயலிழந்தது. இதன் காரணமாக தற்போது பட்டினிப் பிரச்சாரத்தின் படங்களை பதிவேற்றம் செய்ய புதிதாக இணையதளம் உருவாக்கப்படுகிறது. டில்லி கல்வி அமைச் சர் ஆதிஷி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘கெஜ்ரிவால் மார்ச் 21ஆம் தேதி கைதான பிறகுஅவரது உடல் நலம் கடுமையாக பாதிக்கப் பட்டது. தீவிர நீரிழிவுநோயால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட அவரது உடல் எடை வெறும் 12 நாள்களில் 4.5 கிலோ வரை குறைந்துள்ளது.
இது மிகுந்த கவலை அளிக்கிறது. இருப்பினும் அல்லும் பகலும் 24 மணி நேரமும் அவர் நாட்டுக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார். ஏதேனும் அசம்பாவிதம் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு நிகழ்ந்துவிட்டால் இவர்களை யாரும் மன்னிக்கமாட்டார்கள். அர்விந்த் கெஜ்ரிவாலை யும் ஆம் ஆத்மி கட்சியையும் அழிக்க பாஜக எந்த எல்லை வரையும் செல்லும்’’ என்று தெரிவித்துள்ளார்.