நேற்று (04.04.2024) தலைமைச் செயலகத்தில், மக்களவை பொதுத் தேர்தல் 2024 நடத்தை விதிமுறைகள், சட்டம் ஒழுங்கு, செலவினங்கள் கண்காணிப்பு மற்றும் வாக்குப் பதிவு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி அரசு முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, மற்றும் சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர் பி.ஆர்.பாலகிருஷ்ணன், ஆகியோர் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல் தொடர்பான உயர் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர். இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் சங்கர் லால் குமாவத், இணை தலைமைத் தேர்தல் அலுவலர் எச்.எஸ் சிறீகாந்த் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மக்களவை பொதுத் தேர்தல் 2024 நடத்தை விதிமுறைகள் – சட்டம், ஒழுங்கு, செலவினங்கள் கண்காணிப்பு குறித்து ஆலோசனை
Leave a Comment