இதுதான் பா.ஜ.க. ஆட்சியின் யோக்கியதை!

1 Min Read

உ.பி. பிஜேபி சாமியார் ஆட்சியில் கடந்த 8 மாதங்களில் கிறிஸ்தவர்கள் மீதான 500  தாக்குதல்கள்

புதுடில்லி, செப்.21 – கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல் தொடர்­பாக டில்­லி­யில் உள்ள சிவில் சமூக அமைப்­பான யுனை­டெட் கிறிஸ்­டி­யன் போரம் புதிய தரவு ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. தர­வில், “2023-ஆம் ஆண்­டின் முதல் எட்டு மாதங்­­ களில் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல் நிகழ்வு மிக­மோ­ச­மான அள­வில் அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும், முதல் 8 மாதங்­க­ளில் 23 மாநி­லங்­க­ளில் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ராக 525 வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் அரங்­கே­றி­யுள்­ளன” எனக் கூறி­யுள்­ளது.

மேலும் இந்த எண்­ணிக்கை 2022 ஆம் ஆண்டு முழு­வ­தும் நடந்த மொத்த நிகழ்வுக­ளின் எண்­ணிக்­கையை வெறும் 8 மாதங்­க­ளி­லேயே நெருங்­கி­யுள்­ளது” எனக் கூறப்­பட்­டுள்­ளது. கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ரான வன்­முறை நிகழ்வு­க­ளில் பா.ஜ.க. ஆளும் உத்­த­ரப்­ ­ பிர­தே­சம் முத­லி­டத்­தில் உள்­ளது. 

உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் கடந்த 8 மாதங்­க­ளில் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ராக 211 நிகழ்வுகள் அரங்­கே­றி­யுள்­ளன. சத்­தீஸ்­க­ரில் 118 நிகழ்வுகளும் 

அரி­யா­னா­வில் 39 நிகழ்வுக­ளும் அரங்­கே­றி­யுள்­ளது. சத்­தீஸ்­­ கரில் அரங்­கே­றிய சம்­ப­வங்­கள் அனைத்­தும் ஹிந்­துத்­துவா அமைப்­பு­க­ளால் நிகழ்த்­தப்­ பட்­டவை ஆகும். சத்­தீஸ்­கர் மட்­டு­மல்ல, நாடு முழு­வ­தும் 23 மாநி­லங்­­ களில் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ராக அரங்­கே­றிய 95% நிகழ்வு­கள் ஹிந்­துத்­துவா கும்­பல்­க­ளால் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. பா.ஜ.க.வின் இழி அர­சி­ய­லால் கடந்த 5 மாதங்­­களாக பற்றி எரிந்து வரும் மணிப்­பூர் மாநி­லத்­தில் 386 வழி­பாட்­டுத்­த­லங்­கள் கொளுத்­தப்­பட்­டுள்­ளன. 

இதில் 254 கிறிஸ்­தவ தேவா­ல­யங்­கள் ஆகும். மேலும் கிறிஸ்­தவ மக்­களை குறி வைத்து தாக்­கு­தல் நிகழ்வுகள் அங்கு மிக மோச­மாக அதி­க­ரித்து வரு­கின்­றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *