காங்கிரசிடமிருந்து ரூ.3,567 கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க மாட்டோம் உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை திடீர் பல்டி

viduthalai
2 Min Read

புதுடில்லி,ஏப்.2- நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும்வரை காங்கிரசிடம் இருந்து ரூ. மூன்றுஆயிரத்து 567 கோடி வரிபாக்கியை வசூலிக்க கட்டாய நடவுடிக்கை எதுவும் எடுக்கமாட்டோம் என்று உச்ச நீதிமன்றத்தில் வருமானவரித் துறை உத்தரவாதம் அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி 2017- ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை 4 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளை வருமான வரித்துறை மறுமதிப்பீடு செய்தது. அந்த கணக்கு களில் இருந்த தவறுகளால் காங்கிரஸ் கட்சி அபராதம் மற்றும் வட்டியாக ரூ.1823கோடி செலுத்த வேண்டும் என்று வருமானவரித்துறை கடந்த 28ஆம் தேதி தாக்கீது அனுப்பியது.
மேலும், 2014-_2015 முதல்2016-_2017 வரையிலான 3 மதிப்பீட்டு ஆண்டுகளுக் கான காங்கிரசின் வருமானவரி கணக் குகளை வருமானவரித்துறை மறுமதிப் பீடு செய்தது. அதில் இருந்த தவறுகள் காரணமாக மேலும் ரூ.1,744 கோடி செலுத்த வேண்டும் என்று கடந்த 31ஆம் தேதி தாக்கீது அனுப்பியது. எனவே, காங்கிரஸ் கட்சி மொத்தம் ரூ.3 ஆயிரத்து 567 கோடி செலுத்த வேண்டி உள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மனு

நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் வந்த தாக்கீதுகள், காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்சியை பொருளாதார ரீதியாக முடக்க முயற்சி நடப்பதாகக் குற்றம் சாட்டியது. இதையடுத்து, வருமான வரித்துறையின் தாக்கீதுகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது

இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா,அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (1.4.2024) விசா ரணைக்கு வந்தது. அப்போது, காங்கிரஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி “தாங்கள் லாபம் ஈட்டும் நிறுவனம் அல்ல. ஓர் அரசியல் கட்சி என்று கூறினார். பின்னர், வருமானவரித் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது,

இங்கு ஓர் உத்தரவாதம் அளிக்க விரும்புகிறேன்.காங்கிஸ் ஓர் அரசியல் கட்சி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், இடைக்கால நடவடிக் கையாக தேர்தல் முடிவடையும்வரை காங்கிரசிடம் இருந்து ரூ3ஆயிரத்து 567 கோடி பாக்கியை வசூலிக்க கட்டாய நடவடிக்கை எதுவும் வருமானவரித் துறை எடுக்காது.
– இவ்வாறு அவர் கூறினார்.

துஷார் மேத்தாவின் உத்தரவாதத்தை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர்.

வருமானவரித்துறையின் உத்தரவா தத்தை தொடர்ந்து வழக்கு விசார ணையை ஜூலை மாதத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *