புதுடில்லி, ஏப்.2- நாடாளுமன்ற தேர்தலில் ‘மேட்ச்-பிக்சிங்’மூலம் வெற்றிபெற பிரதமர் மோடி முயற் சிப்பதாக ‘இந்தியா’ கூட்டணி பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
டில்லி ராம்லீலா மைதானத்தில் ‘இந்தியா’ கூட்டணி பொதுக்கூட் டம் நடந்தது. அதில், காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:-
தற்போதைய நாடாளுமன்ற தேர்தல், சாதாரண தேர்தல் அல்ல. ஜனநாயகத்தையும் அரசமைப்பு சட்டத்தையும் பாதுகாப்பதற்கான தேர்தல், கிரிக்கெட்டில், நடுவர் களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, கேப்டனும், ஆட்டக்காரர்களும் விலைக்கு வாங்கப்படும்போது வெற்றி கிடைக்கிறது. அதை ‘மேட்ச் -பிக்சிங்’ என்று சொல்வார்கள்.
இப்போது நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. பந்தயம் தொடங்குவதற்கு முன்பே 2 ஆட் டக்காரர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர். அதாவது, 2 முதல மைச்சர்களை கைது செய்துவிட்டனர். இது என்ன மாதிரியான தேர்தல்?
இதன்மூலம், பிரதமர் மோடி ‘மேட்ச்-பிக்சிங்’ மூலம் வெற்றி பெற முயற்சிக்கிறார். மூன்று. நான்கு பெரும்பணக்காரர்களுடன் சேர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட் டுள்ளார். ஏழைகளிடம் இருந்து அரசமைப்பு சட்டத்தை பறிப்ப தற்காக இதை செய்ய பார்க்கிறார்.
அரசமைப்பு சட்டம் என்பது மக்களின் குரல், அது முடிந்து விட்டால். நாடும் முடிந்து விடும். அரசமைப்பு சட்டம் போய் விட்டால், ஏழைகளின் உரிமைகள் பறிக்கப்படும். இடஒதுக்கீடும் இல்லாமல் போய்விடும்.
400தொகுதிகளில் வெற்றி பெற்றால் அரசமைப்பு சட்டத்தை மாற்றுவோம்” என்று ஒரு பா.ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் சொன்னார். அது வெறுமனே சொன்னது அல்ல. அவர்கள் காவல்துறை, அமலாக்கத்துறை, சி.பி.அய். ஆகியவற்றை வைத்து மிரட்டியே நாட்டை ஆளலாம் என்று நினைக்கிறார்கள், ஊடகங் களை விலைக்கு வாங்கலாம். நசுக்கலாம். ஆனால் இந்தியாவின் குரலை நசுக்க முடியாது. உலகில் எந்த சக்தியாலும் மக்களின் குரலை நசுக்க முடியாது.
பா.ஜனதா 400 தொகுதிகளில் வெற்றி பெறப்போவதாக கூறு கிறது. ஆனால், மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரம். மேட்ச்-பிக்சிங், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது ஆகியவை இல்லாமல்,பா.ஜனதாவால் 180 தொகுதிகளுக்குமேல் வெற்றிபெற முடியாது.
பெரிய எதிர்க்கட்சியான காங் கிரசின் அனைத்து வங்கிக்கணக்கு களும் முடக்கப்பட்டுள்ளன.
‘மேட்ச் – பிக்சிங் மூலம் பா.ஜனதா வெற்றி பெற்று அரசமைப்பு சட்டத்தையும் மாற்றிவிட்டால், நாட்டை காப்பாற்ற முடியாது – எங்கு பார்த்தாலும் நெருப்பு பற்றி எரியும்.
-இவ்வாறு அவர் பேசினார்.