சென்னை, செப். 22 பார்கின்சன் நோயுடன் போராடும் நபர்களுக்கு விரிவான சிகிச்சை அளிப்பதில் குறிப்பிடத்தக்க ஒரு படியாக, சென்னை – பள்ளிக்கரணையில் உள்ள டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை பார்கின்சன் ஆதரவு குழுவை 17.9.2023) தொடங்கியுள்ளது.
பார்கின்சன் எனப்படும் நாள்பட்ட நரம்பியல் சிதைவுக் கோளாறானது, இந்தியாவில் உள்ள முதி யோர்களில் கணிசமானோரை பாதிக்கிறது. ஒரு லட்சத்திற்கு 80 பேர் வீதம் இதனால் பாதிக்கப்படு கிறார்கள். மூத்த நரம்பியல் நிபுணரான டாக்டர் ராஜேஸ்வரி ராமச்சந்திரன், “இந்த நோய் நிலை நாள் பட நாள்பட மோசமாகும். எனவே, ஆரம்ப காலத் திலேயே பல துறை சார்ந்த அணுகுமுறை மூலம் தலை யீடு செய்வது முக்கியமானது” என்று வலியுறுத்துகிறார்.
“பார்கின்சன் நோய் அறிகுறிகளை நிர்வகிப்பதில் மருந்துகள் முதன்மையான அம்சமாக இருந்தாலும், வாழ்க்கையின் தரத்தை உறுதிப்படுத்த பேச்சு சிகிச்சை, பிசியோதெரபி, தொழில் சார்ந்த சிகிச்சை மற்றும் உளவியல் போன்ற கூடுதல் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன” என்று நரம்பியல் ஆலோசகர் டாக்டர் பிரவீன் சந்தர் தெரிவித்தார்.
“பார்கின்சன் நோயாளிகளில் 30% பேர் வரை பாதிக்கும் மனச்சோர்வு மற்றும் பதற்றம் போன்ற துணைநோய் நிலைமைகளை நிவர்த்தி செய்வது மேம்பட்ட நலன்களைப் பெறுவது மிக முக்கியமானது” என்று மூத்த மனநல மருத்துவர் டாக்டர் வித்யா மோகன்தாஸ் கூறினார். இந்த ஆதரவுக் குழுவில் சேர ஆர்வமுள்ள நபர்கள், கூடுதல் விவரங்களுக்கு 78248 21206 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த செயல்முறையில் பங்கேற்க கட்டணம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.