காடாம்புலியூர், ஏப். 1- நெய்வேலி சட்ட மன்ற தொகுதி தேர்தல் பரப்புரை மற்றும் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி காடாம்புலியூரில் திரு மண மண்டபத்தில் 29.3.2024 காலை 11 மணி அளவில் சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தேர்தலில் நமது கடமை என் பது குறித்தும் இந்தியா கூட்டணி யின் வலிமை பற்றியும் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்
சி.வே.கணேசன் பேசினார்.
வேட்பா ளர் டாக்டர் விஷ்ணு பிரசாத், கழக பொதுச்செயலாளர் முனை வர் துரை சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட பொறுப் பாளர் அறிவுடை நம்பி மற்றும் தோழமைக் கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்ட கழக தலைவர் தண்டபாணி ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வில் மாவட்ட அமைப்பா ளர் மணிவேல், மாவட்ட இளைஞ ரணி தலைவர் உதயசங்கர், மாவட்ட இணை செயலாளர்
பஞ்சமூர்த்தி, ஒன்றிய அமைப் பாளர் சேகர், மோகன், நூலகர் கண்ணன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.