புதுடில்லி,ஏப். 1- காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை ரூ.1.823 கோடி அபராதம் விதித்ததை கண்டித்து நாடு முழுவதும் 30.3.2024 அன்று கட்சியி னர் தீவிர பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரூ.1,823 கோடி அபராதம்
காங்கிரஸ் கட்சியின் 2017- 2018 முதல் 2020-2021 ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கில் முரண்பாடுகள் இருப்பதாக கூறி அந்த கட்சிக்கு வருமான வரித் துறை ரூ.1823.08 கோடி அபராதம் விதித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு தாக்கீது அனுப்பப்பட்டு உள்ளது.
வருமான வரித்துறையின் இந்த நட வடிக்கை காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கொத்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது-.
காங்கிரஸ் மீது ஏவப்பட்ட வரி பயங்கரவாதம் இது என அந்த கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்டு உள்ள இந்த நடவடிக் கையை கண்டித்து நாடு முழுவதும் 2 நாட்கள் போராட்டம் நடத்த காங் கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது.
அதன்படி நாடு முழுவதும் 30.3.2024 அன்று காங்கிரசார் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இளைஞர் காங்கிரசார்
அந்த வகையில் தலைநகர் டில்லியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப் பாட்டம் நடந்தது.
இதில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் உள் ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சீனிவாஸ் கூறு கையில்,
‘எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த அவற்றின் மீது வரி பயங்கரவாதத்தை பா.ஜனதா ஏவுகிறது. காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த பல்வேறு வழிகளில் மத்திய அரசு முயற்சிக்ககிறது. ஆனால், இந்த தந்திரங்களுக்கு எல்லாம் காங்கிரஸ் அஞ்சாது’ என சூளுரைத்தார்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப் பட்டு உள்ள நிலையில் காங்கிரஸ் மீது தவறான வழியில் வருமான வரித்துறை அபராதம் விதித்துள்ளதாக கூறிய சீனிவாஸ், தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜனதா வசூலித்த. தொகைக்கு ரூ.4,000 கோடி அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
திருவனந்தபுரத்தில் போராட்டம்
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தை மாநில காங் கிரஸ் பொறுப்பு தலைவர் ஹசன் தொடங்கி வைத்தார். இந்த போராட் டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, ‘காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக ஒடுக்கி, தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் விலக்கி வைப்பதே பா.ஜனதாவின் நோக்கம்’ என சாடினார்.
பாஜனதா தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடிக்கணக்கான ரூபாயை குவித்திருப்பதாக குற்றம் சாட்டிய ஹசன், உச்சநீதிமன்றத்தில் இது குறித்த உண்மை தொகையை கூட வெளியிட தயாராக இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சிகளின் நிதி முடக்கம்
சண்டிகாரை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் அங்குள்ள காங்கிரஸ் இல் லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
சண்டிகார் காங்கிரஸ் தலைவர் எச். என்.லக்கி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஏரானமான காங் கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய எச்.எஸ்.லக்கி, நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சமமான கனத்தை ரத்து செய்வதற்காக மோடி அரசு திட்ட மிட்டு செயல்படுகிறது.
எதிர்க் கட்சித் தலைவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில், எதிர்க் கட்சிகளின் நிதியும் முடக்கப்படுகிறது’ என குற்றம் சாட்டினார்.
மோடி அரசின் இந்த நடவடிக் கைகளை ஒட்டு மொத்த நாடும் பார்த்துக் கொண்டு இருப்பதாக கூறிய அவர், மோடி அரசுக்கு முடிவு நிச்சயம் என்றும் தெரிவித்தார்.
ஜனநாயகத்துக்கு ஆபத்து
அசாமின் கவுகாத்தியில் நடத்த போராட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் பிரித்வி ராஜ் சாதே உள்ளீட்ட ஏரானமான தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய சாதே. ‘நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக நாங்கள் கூறி வந்தோம். அது இன்று உண்மையாகி இருக்கிறது.
பாரதிய ஜனதாவின் வரி பயங்கர வாதத்தின் மற்று மொரு உதாரணம்.
இது காங்கிரசுக்கு அபராதம் விதித்த வருமான வரித்துறை, பா. ஜன தாவை கண்டுகொள்ளாமல் இருக் கிறது’ என கண்டனம் தெரிவித்தார்.
இதைப்போல ராஜஸ்தான் உள் ளிட்ட மாநிலங்களிலும் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.