கடலூர்,ஏப்.1- கடலூரில் அனுமதியின்றி தோதல் பரப்புரை மேற்கொண்டதாக, பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் 30.3.2024 அன்று வழக்குப் பதிவு செய்தனர்.
கடலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணின் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் போட்டியிடு கிறார். இவருக்கு ஆதரவாக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, கடலூர் முதுநகர் மணிக்கூண்டு அருகே 30.3.2024 அன்று காலை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
முன்னறிவிப்பு மற்றும் உரிய அனுமதி பெறாமலும், பொது மக்களுக்கு இடையூறாகவும் தோதல் பரப்புரை மேற் கொண்டதாக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, ஓபிசி பிரிவு மாநில நிர்வாகி சாய் சுரேஷ், கடலூர் மாவட்டத் தலைவர் கோவிலானூர் மணிகண்டன், பாமக வேட்பாளர் தங்கர் பச்சான், மாவட்டச் செயலர் சண்.முத்துகிருஷ்ணன் ஆகியோர் மீது கடலூர் புதுநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
தன்பாலினத் திருமணத்திற்கு
தாய்லாந்தில் சட்ட அங்கீகாரம்
பாங்காக், ஏப்.1- தாய்லாந்து நாட்டில் ஒரே பாலின திருமண சட்டத்திற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் தன்பாலினத் திருமணத்திற்கு சட்ட அங்கீ காரம் வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம், எந்த பாலினத்தை சேர்ந்தவரும், திருமணம் செய்யும் போது அவர்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கும். இதற்கு 415 உறுப்பினர்களில் 400 பேர் மசோதாக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சட்டத்தில் இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள், கணவன் மற்றும் மனைவி வார்த்தைகள் தனிநபர்கள், வாழ்க்கை துணையர்கள் என மாற்றப்பட் டுள்ளது.
மேலும், நிதி மற்றும் மருத்துவ உரிமைகள் கிடைப்பதற் கான வாய்ப்புகளை இந்த சட்டம் வழங்குகிறது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், தென்கிழக்கு ஆசியாவில் இத் தகைய சட்டத்தை நிறைவேற்றிய முதல் நாடாக தாய்லாந்து மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சி சாதனை
12 மணி நேரத்திற்குள்
தேர்தலில் வாக்களிப்பதற்கான உறுதிமொழி
சென்னை,ஏப். 1- தேர்தலில் வாக்களிப்பதற்கான கை யொப்பமிட்ட உறுதிமொழியை 4 லட்சம் வாக்காளர்களிடம் இருந்து 12 மணி நேரத்துக்குள் பெற்று சென்னை மாநகராட்சி சாதனை படைத்துள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி வாக்களிப்பதன் அவசி யம் குறித்துவாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத் தும் வகையில் வடசென்னை மக்களவைத் தொகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி 29.3.2024 அன்று நடைபெற்றது.
இதில் 4,10,988 வாக்காளர்களிடம் இருந்து தேர்தலில் வாக்களிப்பதற்கான கையொப்பமிட்ட உறுதிமொழி படி வத்தை 12 மணி நேரத்துக்குள் பெற்று சென்னை மாநகராட்சி உலக சாதனை படைத்துள்ளது. இதனை அங்கீகரிக்கும் வகையில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், இந்தியா ரெக் கார்ட்ஸ் அகாடமி ஆகியவற்றின் சார்பில் உலக சாதனை மேற்கோள் சான்றிதழ்கள், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்ஆர்.லலிதா, தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டா ரவி தேஜா ஆகியோரிடம் மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் 30.3.2024 அன்று வழங்கப்பட்டது.
எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் நடுவர் அர்ச்சனா ராஜேஷ் மற்றும் இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமியின் மூத்த ரெக்கார்ட்ஸ் மேலாளர் ஜெகந்தன் பழனிசாமி ஆகியோர் இந்த சான்றிதழ்களை வழங்கினர். குறுகிய காலத்துக்குள் இவ்வளவு கணிசமான எண்ணிக்கையிலான உறுதி மொழிகளை திரட்டியதன் மூலம், வாக்குப்பதிவின் எதிர் காலத்தை வடிவமைக்கும் உறுதியான அர்ப்பணிப்பை அந்தத் தொகுதி வெளிப்படுத்தியிருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வாக்காளர்களின் கல்வி மற்றும்தேர்தல் பங்கேற்பு திட்ட செயல்பாட்டின் ஒரு பகுதியாக இந்தசாதனை முயற்சி நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை புறக்கணிக்கும்
நாகாலாந்து மக்கள்
கேங்டாங், ஏப். 1- வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஒரே ஒரு மக்களவைத் தொகுதி உள்ள நிலையில், ஒரே கட்டமாக ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் தனி நிர்வாகம் அல்லது 6 மாவட்டங்கள் (கிழக்கு பகுதி) உள்ளடக்கிய தனி மாநிலக் கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்றும் வரை தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு (இஎன்பிஓ) அறிவித்துள்ளது. பழங்குடியினர் பெரும் பான்மையாக வசிக்கும் நாகாலாந்தின் கிழக்குப் பிராந் தியத்தில் இஎன்பிஓ மிக முக்கிய அமைப்பாக உள்ள நிலையில், அந்த அமைப்பின் அறிவிப்பால் கிழக்கு நாகாலாந்து மக்கள் மக்களவை தேர்தலை முழுவதுமாக புறக்கணிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.