நீதித்துறையை பாதுகாப்பது போல் அதன் மீது தாக்குதல் நடத்தும் மோடி
காங்கிரஸ் கண்டனம்
புதுடில்லி, மார்ச் 30- உச்சநீதி மன்ற மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே, இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா மற்றும் 600 வழக்குரை ஞர்கள் அடங்கிய குழு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் டுக்கு கடிதம் எழுதியுள்ள னர். அதில், நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கவும், நீதிமன்ற நடவடிக்கை களில் தலையிடவும் ஒரு குழு முயன்று வருகிறது. ஊழல் வழக்குகளில் சிக் கியுள்ள அரசியல்வாதி களால் நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி நடந்து வருகிறது.
அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என் றால் நீதிமன்றங்களுக்கு உள்ளேயும், ஊடகங்க ளின் வாயிலாகவும் நீதித் துறையை விமர்சிக்கின்ற னர். இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்து டிவிட் செய்துள்ள பிரதமர் மோடி, மற்றவர் களை துன்புறுத்துவது காங்கிரசின் பழங்கால கலாசாரம் என குறிப் பிட்டுள்ளார்.
இதற்கு காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய ராம் ரமேஷ் டிவிட்டரில் பதிலளிக்கையில், நீதித் துறையை பாதுகாப்பது போல் அதன் மீது மோடி தாக்குதல் நடத்துவது பாசங்குத்தனத்தின் உச்சம். 10 ஆண்டுகளில் மக்களை பிரித்தாளவும், கவனத்தை திசை திருப்ப வும், அவதூறுகளை பரப் புவதையும் தான் அவர் செய்து வந்தார். விரைவில் 140 கோடி மக்கள் அவருக்கு தகுந்த பதிலடி கொடுக்க தயாராகி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.