மனிதநேய முடிவு! உடல் உறுப்புக் கொடையாளர்களுக்கு அரசு மரியாதை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Viduthalai
0 Min Read

சென்னை,செப்.23- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

உடல் உறுப்புக் கொடையின்மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.

குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைக் கொடையாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. 

தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும்வகையில், இறக்கும்முன் உறுப்புக் கொடை வழங்குவோரின் இறுதி நிகழ்வுகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்!

– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *