மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் பட்டமளிப்பு விழா சிறப்புரை
வல்லம், செப்.23, கல்விப் பணியில் 35 ஆண்டுகளை நிறைவு செய்து, இந்தியாவின் தலைசிறந்த முதன்மைப் பல்கலைக் கழகமாக விருது பெற்றுள்ள, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் 31-ஆம் பட்டமளிப்பு விழா இன்று (23.09.2023) காலை 10.30 மணிக்கு பல்கலைக் கழக பல்நோக்கு உள்விளை யாட்டு அரங்கில் நடைபெற்றது. சிறப்பு வாய்ந்த இந்நிகழ்ச்சிக்கு இப்பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து உரையாற் றினார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அவர்கள் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா சிறப்புரை யாற்றினார். அவர் தமது உரையில் பட்டம் பெறும் மாணவர்கள் அனைவரும் தங்கள் இலக்கை உயர்வாக நினைத்து வாழ்வில் வெற்றி பெற மிகவும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் பொறியியல் தொழில்நுட்பம், கட்டட எழிற்கலை, கலை, அறிவியல் மற்றும் மேலாண்மைப் புலங்களின் பல்வேறு துறைகளைச் சார்ந்த மொத்தம் 1239 மாணவர்களுக்குப் (இதில் 829 மாணவர்களும் 410 மாணவியர்களும் என்பது குறிப்பிடத்தக்கது) பட்டம் அளிக்கப்பட்டது. இதில் 6 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர். மேலும் இவ் வாண்டின் தரவரிசையில் தகுதி பெற்றவர் களின் எண்ணிக்கை 100 ஆகும். மேற் கொண்டு 37 தங்கப் பதக்கமும், 33 வெள்ளிப் பதக்கமும், 30 வெண்கலப் பதக்கமும் விழா மேடையில் அணிவித்து பாராட்டி சிறப்புச் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பல் கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி வரவேற்புரை யாற்றினார். அவர் தமது உரையில் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) ஆக்கப் பூர்வமான சமூதாயச் சிந்தனை யுடன் செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். குறிப்பாக ஆராய்ச்சி, பெரியார் தொழில் நுட்ப வணிகக் காப்பகம், பெரியார் புரா ஆகிய வற்றின் நிகழ்வுகளை குறிப்பிட்டார். மேலும் கடந்த கல்வியாண்டில் தகுதியான மாணவர்களுக்குப் பல்வேறு அறக்கட் டளையின் சார்பாக கல்வி ஊக்கத் தொகையாக ரூபாய் 3 கோடி வழங்கப் பட்டது எனக் குறிப்பிட்டார்.
மேலும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத் திற்கு (நிகர் நிலைப் பல்கலைக் கழகம்) ‘பன்னாட்டு பசுமை பல்கலைக்கழக விருது’ நியூயார்க்கில் (அமெரிக்க, நியூயார்க்கில்) உள்ள கார்னல் பல்கலைக் கழகத்தில் (செப்டம்பர் 15) நடந்த 7 ஆம் பசுமை கல்வி மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டது.
மேலும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத் திற்கு (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) இந்தியாவிலேயே தலை சிறந்த முதன்மைப் பல்கழைக்கழகம் என்ற விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டதனை பெருமை யோடு குறிப்பிட்டார். அனைத்து பட்டம் பெறும் மாணவர்களுக்கும், அவர்தம் பெற்றோர்களுக்கும் தமது பாராட்டுகளை தெரிவித்து வரவேற்புரையாற்றினர்.
இவ்விழாவிற்கு ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ், முன்னிலை வகித்தார். பதிவாளர் பேரா பி.கே.சிறீவித்யா, தேர்வு நெறியாளர் பேராசிரியர் சு.அசோகன், கல்விப் புல முதன்மையர் பேரா ஜெ.ஜெயசித்ரா உள் ளிட்ட அனைத்து புல முதன்மையர்கள், இயக்கு நர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரி யர்கள், பணியாளர்கள், மாணவர்கள், அவர்தம் பெற்றோர்களும் மற்றும் பல் வேறு ஊடகங்களைச் சார்ந்த வர்களும் பெருமளவில் பங்கேற்று விழாவினைச் சிறப்பித்தனர்.