புதுடில்லி, மார்ச் 29- தனது டெபிட் கார்டு களுக்கான ஆண்டுக் கட்டணங்களை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி உயர்த்தியுள்ளது.
இது குறித்து வங்கியின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்: டெபிட் கார்டுகளுக்கான ஆண்டு பராமரிப்புக் கட்டணங்கள் மாற்றியமைக்கப் படுகின்றன. இந்த மாற்றம் வரும் ஏப். 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். கிளாசிக் டெபிட் கார்டுகளுக்கான ஆண்டு பராமரிப்புக் கட்டணம் ரூ.125-லிருந்து ரூ.200-ஆக உயர்த்தப்படுகிறது. இந்தக் கட்டணம் யுவா மற்றும் பிற வகை டெபிட் கார்டு களுக்கு ரூ.175-லிருந்து ரூ.250-ஆகவும், பிளாட்டினம் டெபிட் கார்டுகளுக்கு ரூ.250-லிருந்து ரூ.325-ஆகவும் உயர்த்தப்படுகிறது. இதுவரை ரூ.350-ஆக இருந்த பிரீமியம் வர்த்தக டெபிட் கார்டுகளுக்கான ஆண்டு பராமரிப்புக் கட்டணம், ரூ.425-ஆக அதிகரிக்கப்படு கிறது. ஏற்கெனவே இருந்ததைப் போல, அனைத்து ஆண்டு பரமாரிப்புக் கட்டணங்களும் 18 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்பட்டவை என்று எஸ்பிஅய் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கெஜ்ரிவால் கைது
காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடக்கம் குறித்து
அமெரிக்கா குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச்.29- டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு உள்ளார். இதை அமெரிக்கா விமர்சித்து இருந்தது.
” இதனால் அதிருப்தி அடைந்த ஒன்றிய அரசு, அமெரிக்க தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து மீண்டும் இந்த விவகாரத்தில் அமெரிக்கா தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி மில்லர் கூறுகையில், ‘டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். வரவிருக்கும் தேர்தல்களில் தீவிரப் பிரசாரம் செய்வதை தடுக்கும் வகையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சில வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாக கூறப்படும் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளையும் நாங்கள் அறிவோம். இந்தச் சிக்கல்கள் ஒவ்வொன்றிற்கும் நியாயமான, வெளிப் படையான மற்றும் சரியான நேரத்தில் சட்டச் செயல்முறைகளை மேற்கொள்ள நாங்கள் வலியுறுத் துகிறோம்’ என தெரிவித்தார்.