புதுடில்லி,மார்ச் 29- காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம் கடந்த மாதம் 1ஆம் தேதி ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலை மையில் நடைபெற்றது.
அப்போது தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்து விட ஆணையம் உத்தரவிட்டது. இந்த கூட்டத்தின்போது மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கருநாடக அரசு வைத்த கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 29ஆவது கூட்டம் எல்.கே.ஹல்தார் தலைமையில் ஏப்ரல் 4ஆம் தேதி டில்லியில் நடை பெற உள்ளது.
இதற்காக தமிழ்நாடு, கருநாடகா, புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் உறுப்பினர் களுக்கு ஆணையத்தின் தலைவர் அழைப்பு விடுத் துள்ளார்.
அன்றைய கூட்டத்தில், நதிநீர் பங்கீடு, நிலுவை நீர், அணை தொடர்பான விவகாரங்கள் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.