கரூர், மார்ச் 29- “பாஜனதா என்ன செய்தாலும் தமிழ்நாட்டில் ஒரு தொகு தியில்கூடவெற்றி பெற முடியாது” என்று கரூரில் நடந்த பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. குறிப்பிட்டார்.
பிரச்சாரம்
கரூர் நாடாளுமன்றதொகுதியில் தி.மு.க கூட்டணி கட்சியான காங் கிரஸ் சார்பில் ஜோதிமணி போட்டியிடு கிறார். அவரை ஆதரித்து நேற்று (28.3.2024) கரூர் வெங்கமேட்டில் திறந்த வேனில் நின்றவாறு தி.மு.க. துணை பொதுச்செயலாள ரும். எம்.பி.யுமான கனிமொழி பிரசாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:-
உடல்நிலை சரியில்லாத செந்தில் பாலாஜிக்கு ஒவ்வொரு முறையும் பிணை மறுக்கப்படுகிறது. தேர்தல் முடிந்த பிறகு விட்டு விடுவார் கள். அவர் உள்ளே இருக்கும் போது ஒருவர் கரூரில் நிற்கமாட்டேன் என கோவைக்கு ஓடி விட்டார்.
ஒரு இடமும் கிடைக்காது
பா.ஜனதா என்ன செய்தாலும், தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் ஒரு இடம் கூட கிடைக் கப்போவது இல்லை. அண்ணாமலை சொல்லக்கூடிய பொய்யை யாரும் நம்ப முடியாது. பா.ஜனதா எதை சொன் னாலும் செய்யமாட்டார்கள். பிரதமர் மோடி ரூ.15 லட்சம் கொடுப்பேன் என்றார். ஆனால் உங்கள் கையில் இருந்த ரூ.500, ரூ.1,000 செல்லாது என பிடுங்கி சென்று விட்டார். ரூ.15 லட்சம் இன்றுவரை வர வில்லை. மோடி எந்த வாக்குறுதியாவது நிறைவேற்றி இருக்கிறாரா?
கியாஸ் சிலிண்டருக்கு மானியம் கொடுப்பதாக கூறினார். ஆனால் விலை இருமடங்கு ஆகிவிட்டது. அதே போல் மானியம் எதுவும் வராது. வரும் ஆனா வராது, அதுதான் மோடி ஆட்சி.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றி காட்டக்கூடியவர். மகளிர் உதவித்தொகை, பெண்களுக்கு கட் டணமில்லாத பேருந்து பயணம் என்பன உள்ளிட்ட வாக்குறு திகளை நிறைவேற்றியவர் முதல மைச்சர்.
ஜி.எஸ்.டி.
இந்தியாவில் பசி, பட்டினியோடு இருக்கக்கூடிய மக்கள் எண்ணிக்கை பா.ஜனதா ஆட்சியில் அதிகரித்து இருக்கிறது. ஜி.எஸ்.டியால் சாமா னிய மக்கள் வேலையில்லாமல் தவிக்கக்கூடிய நிலையில் இருக் கிறார்கள். சிறுகடை வைத்திருப்ப வர்களுக்கும் ஜி.எஸ்.டி. மேலும் ஜி.எஸ்.டி.யால் நூற்பாலைகளை மூடக்கூடிய நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் 2 லட்சம் பேர் வேலை செய்த தொழிலில், தற்போது 50 ஆயிரம் பேருக்கு கூட வேலை இல்லை. அடித்தட்டு மக்களை வாட்டி வருத்திக் கொண் டிருக்கிற ஆட்சிதான் பா.ஜனதா ஆட்சி, இந்த தேர்தல் வெற்றி என்பது நாட்டை பாதுகாக்கக் கூடிய வெற்றி. நாற்பதும் நமதே, நாடும்நமதே என்பதை இந்த தேர் தலில் உருவாக்கி காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதைத் தொடர்ந்து கிருஷ்ண ராயபுரம், க.பரமத்தி கடைவீதி களில் திறந்த வேனில் நின்றவாறு ஜோதிமணிக்கு ஆதரவாக கனிமொழி பிரசாரம் செய்தார்.