புதுடில்லி, மார்ச் 29 அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித் துறையைப் பாதுகாக்க வேண்டும் என்று 600 மூத்த வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
இதுதொடர்பாக மூத்த வழக் குரைஞர்கள் ஹரிஷ் சால்வே, பிங்கிஆனந்த் உட்பட 600 வழக் குரைஞர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடந்த 26-ம் தேதி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஒரு காலத்தில் நீதித் துறை சிறப்பாக செயல்பட்டது. அந்த காலம் நீதித் துறையின் பொற் காலம். இப்போதைய நீதிமன்றங் களின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது என்று ஒரு தரப்பினர் அவதூறு பரப்பி வருகின்றனர்.
ஊழல் வழக்குகளில் சிக்கிய அரசியல்வாதிகளுக்காக சில வழக் குரைஞர்கள் பகலில் நீதிமன்றங் களில் வாதாடுகின்றனர். அந்த வழக்குரைஞர்கள் இரவில் ஊட கங்கள் வாயிலாக நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி செய் கின்றனர். நீதிமன்றத்தின் குறிப் பிட்ட அமர்வுகள் ஒருதலைப்பட்ச மாக செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.சில நேரங்களில் நீதிபதிகள் குறித்து எதிர்மறையாக விமர்சிக்கின்றனர். சமூக வலை தளங்களில் திட்டமிட்டு பொய் யான தகவல்களை பரப்புகின்றனர். இத்தகைய செயல்கள் மூலம் நீதிமன்றங்கள், நீதிபதிகளின் மாண்பை சீர்குலைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த 2019ஆ-ம் ஆண்டு மக் களவைத் தேர்தலின்போது இது போன்ற சதிகள் நடைபெற்றன. தனிப்பட்ட மற்றும் அரசியல் ஆதாயங்களுக்காக தற்போதைய மக்களவைத் தேர்தல் நேரத்திலும் அதே அணுகுமுறையை சில சுயநல குழுக்கள் தீவிரமாக கடைப் பிடிக்கின்றன.
இதை அனுமதிக்கக்கூடாது. அரசியல் அழுத்தங்களில்இருந்து நீதித் துறையைப் பாதுகாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அமைதியை கடைப்பிடித்தால் தவறிழைப்போருக்கு தைரியம் அதிகமாகிவிடும்.
இந்திய நீதித் துறையின் வலு வான தூண்களாக நீதிமன்றங்கள் உள்ளன. ஆனால் நீதிமன்றங்கள் குறித்து எதிர்மறையாக விமர் சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த பிரச்சினையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். தலைமை நீதிபதியும், இதர நீதிபதிகளும் இணைந்து நமது நீதிமன்றங்களை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு வழக்குரை ஞர்கள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.