தோல்வி பயத்தால் பிஜேபி
லோக் ஆயுக்தா அதிகாரிகள் மூலம் சோதனைகளை நடத்துவது அதிகரிப்பு
கருநாடகாவில் 60 இடங்களில் சோதனை
பெங்களூரு, மார்ச் 28 கருநாடகாவில் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் 2 கட்டங்களாக மக் களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்காக பணத்தை அரசு அதிகாரிகள் மூலம் பதுக்கி வைத்திருப்பதாக லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் நேற்று (27.3.2024) காலை 7 மணிக்கு பீதர் வட்டாரப் போக்குவரத்து செயலர் சிவகுமார் சுவாமி, கோலார் மாவட்ட வருவாய்த்துறை கோட்டாட்சியர் நாகராஜப்பா, பாகல்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சதாசிவய்யா உள்ளிட்ட 13 அரசு அதிகாரிகளுடன் தொடர்புடைய 60 இடங்களில் சோதனை நடத்தினர். பெங்களூரு, மைசூரு, ராம்நகர், உத்தர கன்னடா, உடுப்பி, குடகு உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை நடந்தது. 8 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோத னையில் முக்கிய ஆவணங்கள், லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கப்பணம், தங்க வைர நகைகள், ஆடம் பர வாகனங்கள் சிக்கியதாக லோக் ஆயுக்தா வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதான் பிஜேபியின் ஜனநாயகம்!
அரவிந்த் கெஜ்ரிவால் கைது
அமெரிக்கா கருத்து தெரிவிப்பு
அமெரிக்க தூதரக அதிகாரியை அழைத்து ஒன்றிய பிஜேபி அரசு கண்டிப்பு
புதுடில்லி, மார்ச் 28 டில்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது விவகாரம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்த நிலையில் அந் நாட்டின் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் கடந்த 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந் நிலையில், அர்விந்த் கெஜ்ரிவால் கைது விவகார வழக்கு நியாயமாக நடைபெற வேண்டும் என்று 26.3.2024 அன்று அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று (27.3.2024) அமெரிக்காவின் இந்த கருத்துக்கு இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவிலுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்துக்கு அமெரிக்க தூதரக அதிகாரி குளோரியா பெர் பெனாவை நேரில் அழைத்து இந்த கண்டனத்தை இந்திய அரசு பதிவு செய்துள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். அமெரிக்க தூதரக அதிகாரி குளோரியா பெர்னெனாவுடனான, இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளின் சந்திப்பு சுமார் 40 நிமிட நேரம் நீடித்தது. ஏற்கெனவே, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மனி தூதரகத்தின் அதிகாரி ஜார்ஜ் என்ஸ்வெய்லர் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.