மாநிலங்களவையில் திருச்சி சிவா
புதுடில்லி, செப். 23- “சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞா னிகள் ஹிந்தியும் சமஸ்கிருதமும் படிக்கவில்லை” என்று நாடா ளுமன்ற மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா கூறினார்.
இது குறித்து அவர் மாநிலங் களவையில் பேசியதாவது:-
இந்தியாவின் வியக்கத்தக்க விண்வெளி வெற்றியை, சந்திர யான் 3 விண்கலத்தின் சாத னையை பேசும் விவாதத்தில் இந்தியக்குடிமகன் என்ற பெரு மிதத்தோடு பங்கேற்கிறேன். பாரதக் குடிமகனாக அல்ல.
சந்திரயான் விண்கலம் சந்தி ரனில் தடம் பதித்து கருவிக ளெல்லாம் சிறப்பாக செயலாற் றுவதை உலகமே போற்றும் பெருமைக்குரிய தருணமிது. ஆனால் இந்த புதிய நாடாளு மன்றத்தில்இரண்டு நாட்களாக கொந்தளிப்பான சூழலில் நாம் நுழைந்திருக்கிறோம். அது சந்திரன். இது நாடாளுமன்றம்.
நிலவின் தென்துருவத்தில் தடம்பதித்த முதல் நாடு இந்தியா என்பதை உலகமே கொண்டா டுகிறது. இத்திட்டத்தின் வெற்றி மூலம் இந்திய விண்வெளி ஆய் வுத் துறை உலக அரங்கில் பெரி யளவில் பாராட்டப்படுகிறது. இந்திய விண்கலங்கள் வெற்றிப் பயணத்தின் மைல் கற்கள். இதற்கு காரணமான இஸ்ரோ குழுவின் ஆர்வம் மற்றும் அர்ப் பணிப்பே உலக அரங்கில் நம் பெருமையை உயர்த்தியிருக்கி றது.
முதல் விண்கலம் செலுத்திய விக்ரம் சாராபாய் அவர்களை தொடக்கமாகக் கொண்ட நீண்ட நெடிய பயணமிது. இன்று உச்சத்தை தொட்டிருக் கிறது. ஜாதி மத உணர்வுக்கு அப்பாற்பட்ட நாடு இந்தியா. சந்திரான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அரசுப்பள்ளியில் படித்தவர். கோவையிலும் திருச்சி NITயிலும் பொறியியல் பயின்றவர். விண்வெளி பற்றி ஆர்வம்கொண்டு படிப்பவர்க ளுக்கு உதாரணமாக ஜொலிக் கிறார்.
சந்திரயான்-3 திட்ட இயக் குநர்களில் ஒருவராக சீரிய முறையில் பணியாற்றிய சங்கரன் நான் அரசுக்கல்லூரியில் படித் துக் கொண்டிருந்தபோது அதே கல்லூரியில் எனக்கு இளைய வராக ஆக படித்தவர். அவரை எங்கள் கல்லூரிக்கு அழைத்து பாராட்ட விருக்கிறோம். அவரை நான் நேரில் சந்தித்து வாழ்த்தலாம். ஆனால் இந்த அவையில் அவரது பெயரை குறிப்பிட்டு வாழ்த்துவது பெரு மைக்குரியது. சாலப்பொருத்த மானது.
சந்திரயான்-2 திட்ட இயக்கு நர் திருமதி.வனிதா முத்தையா தமிழ்நாட்டின் சென்னையைச் சார்ந்தவர். சாதாரண நடுத்தர வர்க்கத்தை சார்ந்த இவர் அரசுப்பள்ளியில் படித்தவர். பொறியியலையும் தமிழ்நாட் டிலே படித்தவர்.
சந்திரயான் – 1 திட்ட இயக் குநர் மயில்சாமி அண்ணாதுரை “நிலா மனிதன்” என அழைக்கப் படுபவர். 1969 அப்பல்லோ விண் கலத்தில் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்று திரும்பினார். ஆனால் மயில்சாமி அண்ணாத்துரையின் சந்திரயான் -1 நிலவைத் தொட் டதும், அங்கே நீர் இருப்பதை உறுதி செய்ததும் உலகையே உலுக்கிப்போட்டது.
வெற்றிகரமாக 16 செயற் கைக்கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோவில் சாதனை படைத்தவர். தமிழ்நாட்டைச் சார்ந்தவர். எளிய குடும்பத்தில் பிறந்தவர். அரசுப்பள்ளியில் படித்தவர். தற்போது சூரியனை ஆய்வுசெய்யும் ஆதித்யா -1 திட்ட இயக்குநர் திருமதி. நிஷா ஷாஜி சுல்தானா தமிழ்நாட்டின் தெற் குப் பகுதியான செங்கோட் டையை சார்ந்தவர். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்தவர்.
சாதனை படைப்பவர்கள் மேல்நாட்டில் படிக்க வேண் டியதில்லை. அரசுப்பள்ளியில் படித்தாலே போதும் என்பதை நிரூபித்த சாதனையாளர்கள் இவர்கள். அனைவரும் தமிழ் வழியில் பயின்றவர்கள். இரண் டாவது மொழியாக ஆங்கிலம் கற்றவர்கள். இவர்கள் யாருக்கும் ஹிந்தியோ சமஸ்கிருதமோ தெரியாது.
இந்திய விண்வெளி ஆய்வுத் துறையை வளர்ந்த நாடுகளே வியக்குமளவுக்கு உயர்த்திய இவர் கள் சாமானிய குடும்பத்தவர்கள். தாய்மொழியில் படித்தவர்கள். இணைப்பு மொழியாக ஆங்கி லம் கற்றவர்கள். பல சாதனை களை படைத்தவர்கள். இஸ்ரோ தலைவராக இருந்த கன்னியா குமரியைச் சேர்ந்த சிவன், தற் போதைய சோம்நாத் போன்ற வர்களிடமிருந்து நாம் இவற்றை அறிந்து கொள்கிறோம். ஒட்டு மொத்த இந்தியாவே பாராட்டி யது. நாடாளுமன்றம்வாழ்த்தி யது. தி.மு.க. சார்பில் நான் வாழ்த்தினேன்.
சந்திரயான்-3 இலக்கை தொட்டதும் வீரமுத்து வேலை அழைத்து நேரில் பாராட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். நாடாளுமன்றமும் அவர்களை பாராட்டி வெகு மதியளிக்க கடமைப்பட்டுள்ளது. காரணம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்தியவர்கள் அவர்கள். இத்தகைய சிறப்பு டைய இஸ்ரோ விஞ்ஞானிகளை நாடாளுமன்றத்தில்பாராட்டி ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்ற வேண்டுமென்று முன் மொழிகிறேன். அவை உறுப்பி னர்களும் ஏற்பார்கள். அவைத் தலைவர் அவர்களே உங்கள் வாயிலாக அமைச்சரையும் அவ் வாறான தீர்மானம் நிறைவேற்ற கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசினார்.