அகர்தலா, மார்ச் 28- திரிபுரா பார் கவுன்சிலுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் பாஜக அணியினர் பெரும் தில்லுமுல்லுகளைச் செய்ய முயன் றும், இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் ஆதரவு பெற்ற அணி வெற்றி பெற்றது.
தலைவராக மிருணாள் காந்தி பிஸ் வாஸ் மற்றும் செயலாளராக கவுசிக் இந்து ஆகிய இருவரும் தேர்வு செய்யப் பட்டனர். இருவருமே இடது முன் னணி மற்றும் காங்கிரஸ் ஆதரவு அணியைச் சேர்ந்தவர்களாவர். துணைத் தலைவராகப் பாஜக ஆதரவு பெற்ற சுப்ரதா தேப்நாத் தேர்வானார்.
17 பேர் செயற்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். அதில் 9 பேர் இடது முன்னணி மற்றும் காங்கி ரஸ் அணியிலிருந்தும், 8 பேர் பாஜக ஆத ரவு அணியிலிருந்தும் வெற்றி பெற்றுள் ளனர். மக்களவைத் தேர்தல் நடக்கவி ருப்பதால், பார் கவுன்சில் தேர்தலில் பெரும் வெற்றியைக் காட்டி விட வேண்டும் என்று பாஜக பெரும் முயற்சி செய்தது. திரிபுராவில் மக்கள வைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 மற்றும் 26 தேதிகளில் நடைபெற வுள்ள நிலையில், பார் கவுன்சில் தேர் தல் முடிவு பாஜகவுக்கு பின்னடை வாகக் கருதப்படுகிறது.