கொல்கத்தா,மார்ச் 28- மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா குறித்து பா.ஜனதா தலைவர் கூறிய கருத்தால் பெரும் சர்ச்சை ஏற் பட்டு உள்ளது.
மேற்கு வங்காள மாநில பா.ஜனதா மேனாள் தலைவரும், மேதினிபூர் நாடாளுமன்ற உறுப்பினருமான திலிப் கோஷ், வருகிற தேர்தலில் பர்தமான்துர் காபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவர் மாநில முதலமைச்சர் மம்தா குறித்து பேசியதாக கூறப்படும் காணொலி ஒன்று மாநிலம் முழுவதும் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்ப டுத்தி இருக்கிறது.
அதில் அவர், மம்தா கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது பயன்படுத்திய ‘மேற்கு வங்காளத்துக்கு சொந்த மகளே தேவை’ என்ற முழக் கத்தை தரக்குறைவாக விமர் சித்து இருந்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம்
அதாவது, மம்தா கோவா சென்றால், நான் கோவாவின் மகள் என்கிறார். திரிபுரா சென் றால், திரிபுராவின் மகள் என் கிறார் என்று கூறியவாறு மம்தாவின் பிறப்பை குறித்து தரக்குறைவாக பேசியுள்ளார்.
திலிப் கோஷின் இந்த கருத்து ஆளும் திரிணாமுல் காங்கிரசா ரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதா வினரின் டி.என்.ஏ. இதுதான் எனக் கூறி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
மேலும் இது தொடர்பாக திலிப் கோஷ் மீது தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்து உள்ளது.
மன்னிப்பு கேட்க வேண்டும்.
அதில், ‘திலிப் கோஷின் கருத்துகள் கண்ணியத்தின் எல் லைகளைத் தாண்டுவது மட்டு மல்லாமல், அதிகாரப் பதவிக ளில் இருக்கும் பெண்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் அவமரியாதை கலாசாரத்தை ஊக்குவிப்பதாகும் என கூறப் பட்டு இருந்தது.
தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறியிருக்கும் திலிப் கோஷ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் வலி யுறுத்தப் பட்டு உள்ளது.
முதலமைச்சருக்கு எதிராக அவதூறான கருத்துகளை வெளியிட்டதற்காக திலிப் கோஷ் மன்னிப்பு கேட்கவேண்டும் என மாநில பெண்கள் மற்றும் குழந் தைகள் நலத்துறை அமைச்சர் சஷி பஞ்சா கூறியுள்ளார்.
இந்த விவகாரம் மேற்கு வங்காள அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.