புதுடில்லி,மார்ச் 28- இந்தத் தேர்தலில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு, இடஒதுக்கீட்டில் இந்தத் தேர்த உச்ச வரம்பை அகற்றுவது, பட்டியல் ஜாதி / பழங்குடியினருக் குத் தனி பட்ஜெட் என்பன போன்ற வாக் குறுதிகளை முன்வைத்தி ருக்கும் காங்கிரஸ் கட்சி, அடுத்து இதர பிற்படுத்தப் பட்டோர், பட்டியல் ஜாதியினர் / பழங்குடியினருக்கு தனியார் பல் கலைக்கழக உயர் கல்விப் படிப்புகளில் இடஒதுக் கீடு வழங்கப்படும் என அறிவிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இதே வாக்குறுதியை 2019 தேர்தலிலும் காங் கிரஸ் முன்வைத்தது.
சமூகரீதியிலும் கல்வி ரீதியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர் / பட்டியல் ஜாதியினர் / பழங்குடியினருக்கு அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கும் வகையில், 2005இல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது அரசமைப்புச் சட்டத்தில் 93ஆவது திருத்தம் கொண்டுவரப் பட்டது.
அது அய்அய்டி, அய்அய்எம் போன்ற அரசு உயர் கல்வி நிறுவ னங்களில் இதர பிற் படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை நீட் டிக்க வழிவகை செய்தது.
எனினும், தனியார் உயர் கல்வி நிறுவனங்க ளில் இதுவரை இடஒதுக் கீடு முறை அமலாக வில்லை. இந்தச் சூழலில், காங்கிரஸின் இந்த வாக் குறுதி முக்கியத்துவம் பெறுகிறது.