அஞ்சல் துறையில் பணியிடங்களுக்கு தேர்வு எழுதி 11 மாதங்கள் கடந்தும் தேர்வுப் பட்டியலை வெளியிடவில்லை : கிராம அஞ்சல் ஊழியர்கள் கடும் அதிருப்தி
திருச்சி, மார்ச் 28- தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் அஞ்சல்காரர், அஞ்சல் பாதுகாவலர், பன்முகப் பணியாளர் ஆகிய பணியிடங்களுக் கான துறை ரீதியான தேர்வு கடந்த ஆண்டு ஏப்.30ஆம் தேதி நடை பெற்றது. இதில் தமிழ்நாடு முழுவ தும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், அஞ்சல்காரர், அஞ்சல் பாதுகாவலர் ஆகிய பணி யிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டன. ஆனால், 3 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் பங்கேற்ற பன்முகப் பணி யாளர் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் கடந்த நவ.23ஆம் தேதி வெளியிடப்பட்டும், தேர்வானவர் களின் பட்டியல் இன்னும் வெளி யாகவில்லை.
இதுகுறித்து அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க திருச்சி கோட்டச் செயலாளர் மருதமுத்து, செய்தியாளரிடம் கூறிய தாவது:
தேர்வுப் பட்டியலை வெளியிடு வதற்கு ஏற்படும் காலதாமதத்தால், பன்முகப் பணியாளருக்கு பணி மூப்பு, ஊதிய இழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண் பெற் றும்,இவர்களில் யாரேனும் இந்த காத்திருப்பு காலத்தில் உயிரிழந் தால், அவர்களின் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுமா என்ற கேள்வியும் உள்ளது.
இதற்கிடையே, 2024ஆம் ஆண் டுக்கான போட்டித் தேர்வும் நெருங்கிவிட்டது. கடந்த தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்படாத நிலையில், இந் தத் தேர்வை எழுதுவதா, வேண் டாமா என்றகுழப்பத்தில் பலரும் உள்ளனர். தேர்தல் காலம் என் பதை காரணம் காட்டி, தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை அறி விக்கதடையில்லை.
ஏனெனில், மகாராட்டிரா, பீகார் மாநிலங்களில்கூட தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான், தேர்வர்களின் பட்டியல் வெளி யிடப்பட்டுள்ளது. எனவே, இனி யும் காலம் தாமதிக்காமல் தேர் வானவர்களின் பட்டியலை வெளி யிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.