மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ஆர்.சுதாவுக்கு வாழ்த்து தெரிவித்து மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் சால்வை அணிவித்து விடுதலை நாளிதழ் மற்றும் தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘மக்கள் விரோத பாஜக அரசை விரட்டியடிப்போம்!’ நூலை வழங்கினார். நகர செயலாளர் பூ.சி.காமராஜ், ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி.இளங் கோவன், செயலாளர் அ.சாமிதுரை, பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் தங்க.செல்வ ராஜ், குத்தாலம் ஒன்றிய செயலாளர் கு.இளமாறன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கு.இளஞ்செழியன் ஆகியோர் உடன் இருந்தனர்.