சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதி இன்றி கட்டுமானங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

2 Min Read

சென்னை, மார்ச் 28- சிதம்பரம் நடராஜர் கோயில் புரா தன சின்னமாக அறிவிக் கப்படவில்லை என ஒன் றிய தொல்லியல் துறை யும், இந்து சமய அற நிலையத் துறையும் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளன.
சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு கோபு ரங்கள் அமைந்துள்ள பகுதியில் எந்தவொரு அனுமதியும் பெறாமல் நந்தவனம் அமைக்கப் பட்டு வருவதாகவும், கோயிலின் முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்க ளில் அனுமதியின்றி நூறு அறைகள் கட்டப்பட்டு வருவதாகவும் கூறி நட ராஜன் தீட்சிதர் என்பவர் சென்னை உயர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெ னவே தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் பிர காரத்தில் அனுமதியின்றி கட்டுமானங்கள் கட்டப் படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என அறநிலையத் துறை மற் றும் தொல்லியல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட் டது.
அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அனுமதியன்றி கட்டுமா னங்கள் கட்டப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி பொது தீட்சிதர்கள் குழு தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட மனு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர் வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அடங் கிய அமர்வில் 26.3.2024 அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பொது தீட்சிதர்கள் குழு சார்பில், இந்த விவகாரத்தில் எங் களது தரப்பு வாதத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிதம்பரம் கோயிலை ஒன்றிய தொல்லியல் துறைதான் ஆய்வு செய்ய முடியும் என்றும் அறநிலையத் துறை ஆய்வு செய்ய அதி காரம் கிடையாது என் றும் வாதிடப்பட்டது.

ஆனால் பதிலுக்கு தமிழ்நாடு அறநிலையத் துறை மற்றும் ஒன்றிய தொல்லியல் துறை சார் பில் சிதம்பரம் நடராஜர் கோயில் புராதன சின்னம் கிடையாது என்பதால் ஒன்றிய தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண் டிய அவசியமில்லை என வாதிடப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், ஏற்கெ னவே நாங்கள் விசாரித்த வழக்கில் இறுதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்பட வில்லை என்பதால், அதை மறுஆய்வு செய்ய வேண்டியதில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *