புதுச்சேரி, மார்ச் 28 திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் தஞ்சையில் நடை பெற்றது. “தமிழர் தலைவர்” கி.வீர மணி தலைமையில் இந்தியா கூட் டணி வேட்பாளர்களை ஆதரித்து வெற்றிப் பெற செய்வதெனத் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையில் புதுச் சேரியில் திராவிடர் கழக மாநிலத் தலைவர் சிவ. வீரமணி மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் ஆகி யோர்கள் தலைமையில் புதுச்சேரி நாடாளுமன்ற மக்களவை வேட் பாளர் வெ.வைத்திலிங்கம் அவர் களை நேரில் சந்தித்து திராவிடர் கழகத்தின் ஆதரவை தெரிவித் தோம். வேட்பாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளைப் பரி மாறிக் கொண்டோம்.
நிகழ்ச்சியில் மாவட்டச் செய லாளர் கி.அறிவழகன், காப்பாளர் இரா. சடகோபன், பொதுக்குழு உறுப்பினர் லோ. பழனி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச் செல்வன், நகராட்சிக் கழக தலைவர்கள் சு.துளசிராமன், களஞ் சியம் வெங்கடேசன், பே.ஆதிநாரா யணன், பார்த்திபன் ஆகியோர்கள் உடனிருந்தனர்.