மதுரை, மார்ச் 28- மதுரையில் 24.3.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை கே புதூர் அருகில் உள்ள அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் மதுரை மாநகர் மாவட்ட கழகம் நடத்திய தொண் டறத்தாய் அன்னை மணியம் மையார் நினைவு நாள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் அ.முருகா னந்தம் தலைமை உரையாற்றினார். அனைவரும் வரவேற்று மாவட்ட செயலாளர் இரா.லீ.சுரேஷ் வர வேற்புரையாற்றினார். முன்னிலை ஏற்று திராவிட மாவட்ட காப்பா ளர் சே.மு.முனியசாமி பகுத்தறிவா ளர் கழகத்தினுடைய உசிலை மாவட்ட தலைவர் ச.பால்ராஜ், மகளிர் பாசறை அமைப்பாளர் அல்லிராணி தி.அஜிதா, ராஜேஸ் வரி ராமசாமி வழக்குரைஞர் நா. கணேசன் ஆகியோர் முன்னிலை ஏற்று தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் அவர்களுடைய நினைவை போற்றும் பல்வேறு செய்திகளை எடுத்துச் சொனார் கள்.
நிகழ்ச்சியில் தொடக்க உரை யாற்றிய தலைமைக் கழக அமைப் பாளர் செல்வம் இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கிய அல் அமீன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சேக் நபிக்கு தன்னுடைய நன்றியை தெரிவித் ததோடு அன்னையின் பிறந்தநாள் அறிக்கையில் தமிழர்தலைவர் அவர்கள் எழுதிய அன்னையின் அருந்தொண்டை எடுத்துக் கூறி னார்.
வழக்குரைஞர் மதிவதனி உரை
நிறைவாக திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் மதிவதனி உரையாற் றினார். அவருடைய உரையில்,
பெண்களுக்கு பெயர் வைப்ப தில் கூட அரசியல் உள்ளது தென் பகுதியில் நான் கேள்விப்பட்டிருக் கிறேன், பெண்களுக்கு சாதாரண மாக போதும் பொண்ணு என்று பெயர் வைப்பாங்க. பெண் பிள்ளைகளில் மூன்று பேர் பிறந்து விட்டால் அடுத்த பெண் குழந்தை பிறந்த விடக்கூடாது என்பதற்காக போதும் பொன்னு என்று பெயர் வைத்தார்கள். இன்னொரு ஆச் சரியம் சில நாட்களுக்கு முன்பாக காஞ்சிபுரத்தில்ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வரும்பொழுது ஒரு விளம்பர ப்ளக்ஸ் போர்டை பார்த் தேன் அதில் வேண்டாம் என எழுதி இருந்தது. அது என்ன என்று பார்த்தால் மணப்பெண் ணின் அம்மா பெயர் வேண்டாம் பொண்ணு பின்னால் சிலகாலத் தில் பொண்ணு என்பது எடுத்து விட்டு வேண்டாம் என்று வைத்து விட்டார்கள். அது என்ன பெண் பிள்ளை என்றால் வேண்டாம் என்று பெயர் வைப்பது?.
பெண் என்று சொன்னால் செலவு தண்டம் என்று சொல்லி பெண் பிள்ளைகளை போதும் பொண்ணு என்று பெயர் வைத்த காலம் உண்டு அது போன்ற காலத்தில் தான் தந்தை பெரியார் அவர்கள் பெண்களுக்கு அருமைக் கண்ணு அறிவுக்கண்ணு என்று பெயர் வைத்தார்கள் சொந்த தாய் தந்தையே பெண்களை வேண்டாம் என்று பார்த்தபோது நம்மை அறிவுக் கண்களாகவும் அருமைக் கண்களாகவும் பார்த்த தலைவர் தான் தந்தை பெரியார் என்பதை பெருமிதத்தோடு எடுத்துச் சொல் லுகிறேன் என்று கூறினார்.
பெண்களுக்கு பெயர்வைப்பதில் தொடங்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த கல்வி, வேலை வாய்ப்பு கொடுத்து பெண்கள் முன்னேற வழி ஏற் படுத்தினார்.
இன்னும் கூட அன்னை மணி யம்மையாரை கொச்சைப்படுத்து வதும் வளர்ப்பு மகள் என்று பார்ப் பனர்கள் கூறக்காரணம் அன்னை மணியம்மையார் அவர்கள் தந்தை பெரியாரின் அவர் உடல் நலனை பாதுகாப்பதோடு இருந்திருந்தால் இதுபோல விமர்சனங்கள் வந்தி ருக்க வாய்ப்பில்லை.
ஆனால் தந்தை பெரியாரை உயிரை காத்ததோடு என் வாழ்வை பொது வாழ்க்கைக்கு அர்ப்பணிப் பேன் என்று சொன்னாரே; இது தான் என் பாதை என்று 43 வயதில் ஒரு பெண்மணி முடிவை எடுக் கின்றார் என்று சொன்னால் பார்ப்பனியம் அலறாதா?
மனுதர்மப்படி பெண்கள் யோசிக்க கூடாது என்பது அவர் கள் தத்துவம். இந்த தத்துவத்தை உடைக்கும்போது அவர்களுக்கு எதிர்ப்பு என்பது இருக்கத்தானே செய்யும். தமக்குப் பின்னால் இந்த இயக்கத்தையும் இயக்கத்தின் சொத்தை பாதுகாப்பதும் குறித்து யோசித்தபோது மணியம்மையார் ஒருவரால் தான் முடியும் என்று நம்பினார்.
அதன் காரணமாகவே இயக்கத் தில் மூத்தோர்கள் பலர் இருந்த நிலையிலும் அம்மா அவர்களை நம்பி இயக்கத்தையும் சொத்துக ளையும் ஒப்படைக்க திருமணம் என்கின்ற ஏற்பாட்டினை செய் தார்.
அந்த நேரத்தில் இதற்காக தந்தை பெரியாரை எதிர்த்தவர்கள் அவருடைய மறைவுக்குப் பிறகு தந்தை பெரியார் அவர் கள் ஆயுள் நீட்டித்ததற்கு காரணம் அன்னை மணியம்மையாரே என்று சொன்னார்கள்.
அதன் காரணமாகத்தான், அய்யா திரட்டித் தந்ததையும் தனக்கு பெரியார் தந்த சொத்து களையும் இயக்கத்திற்கு வழங்கி தமிழ் சமூகத்திற்கு பயன்படும் வகையில் தமிழர்தலைவர் அவர் களிடம் ஒப்படைத்தார். இன்றைக் கும் இந்த இயக்கம் திராவிடர் கழ கம் வளமாகவும், மக்கள் மத்தியில் பெயர்பெற்றும், கட்டுப்பாடு காக் கும் தொண்டர்களைப் பெற்ற இயக்கமாக இருப்பதற்கு தொண் டறத்தாய் அன்னை மணியம்மை யாரே என்பதைச் சொல்லி அம்மா வைப் போற்றுவோம் அய்யா, அம்மா போட்டுத் தந்த பாதையில் எவ்வித சபலங்களுக்கும் ஆளா காமல் நம்மையெல்லாம் வழி நடத்திச் செல்லும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழியிலே தொண்டினைத் தொடர்வோம் என்று கூறினார்.