திட்டமாம்!
அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளதாம்! மேலும் சுங்கச்சாவடி கட்டணம் உயருகிறது.
குரல் மாதிரி
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத் தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட நிகழ்வு தொடர்பான வழக்கில் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி.
வெப்பம்
தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவும் வறண்ட வானிலை காரணமாக 5 நாள்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப் படும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது.
புகார்…
இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டு பரிசு அறிவித்துள்ள பாரதீய ஜனதா கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத் துக்கு தி.மு.க. புகார் கடிதம் எழுதியுள்ளது.
வரி வசூல்
சென்னை மாநகராட்சியில் 2023-2024 நிதியாண்டில் ரூ.1,530 கோடி சொத்து வரி வசூலாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புரளும்…
வேட்பாளர் செலவுத் தொகையை ரூ.95 லட்சமாக உயர்த்தியதால் இந்த மக்களவை தேர்தலில் ரூ1 லட்சம் கோடி பணம் புரளும் வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இயங்கும்…
குடிநீர், கழிவுநீர், வரி செலுத்த வரும் 31ஆம் தேதி கடைசி நாள் என்பதால், அன்றைய நாளான, ஞாயிற்றுக் கிழமை அனைத்து வரி வசூல் மய்யங்களும் இயங்கும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
டிஜியாத்ரா திட்டம்
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் டிஜிட்டல் முயற்சியாக பயணிகளுக்கு சிரமமில்லாத பயணத்தை வழங்குவதற்காக இந்திய விமானங்கள் ஆணையம் டிஜியாத்ரா திட்டத்தை அறிவித்துள்ளது. காகிதமற்ற பயணத்தை ஊக்குவிப்பதாக (2022லிருந்து) இது தொடர்கிறது.
செய்திச் சுருக்கம்
Leave a Comment