புதுடில்லி, மார்ச் 27- டில்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது
டில்லி மது பான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டில்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த வாரம் கைது செய்தது. அவரை அம லாக்கத்துறை காவலில் வைத்து விசாரித்து வருகிறது. இதனிடையே கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் தொடர் போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஊழல் வழக்கில் கெஜ்ரிவாலை கைது செய்ததை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் டில்லியில் பிரதமர் இல்லத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத் தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது.
டில்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான கோபால் ராய், சமூக வலைத்தளத்தில் இதனை அறிவித்தார். கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத் தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்
இதனிடையே பிரதமர் இல் லத்தை முற்றுகையிடப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பிரதமர் இல்லத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டது.
குறிப்பாக பிரதமர் இல்லம் அருகே உள்ள லோக் கல்யாண் மார்க் மெட்ரோ ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டு அங்கு கலவர தடுப்புப் படையினர் உள்பட நூற்றுக்கணக் கான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.
அதேபோல் மத்திய டில்லியில் உள்ள படேல் சவுக் மெட்ரோ ரயில் நிலையம் உள்படமேலும் சில மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப் பட்டு பாதுகாப்பு நடவடிக் கைகள் பலப்படுத்தப்பட்டன.
பஞ்சாப் அமைச்சர் தலைமையில் போராட்டம்
இந்த நிலையில் பஞ்சாப் அமைச்சரும், ஆம் ஆத்மி தலைவருமான ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், டில்லி ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப் பினர் சோம்நாத் பாரதி ஆகி யோரின் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் ஏராளமா னோர் படேல் சவுக்மெட்ரோ ரயில் நிலையத்தின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாது காப்புப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் “இங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை. அமைதியாக கலைந்து செல்லுங்கள்” என போராட்டக்காரர்களை எச்சரித்தனர்.
ஆனால் அதனை பொருட் படுத்தாத ஆம் ஆத்மி கட்சியினர் காவல்துறையினரின் தடுப்புகளைமீறி முன்னேறி செல்ல முயன்றனர். இதனால் அவர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராடியவர்களை கைது செய்தனர்
இதனையடுத்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட் டதாக கூறி பஞ்சாப் அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், டில்லி சட்டமன்ற உறுப்பினர் சோம் நாத்பாரதி உள்பட போராட்டக்காரர்கள் அனை வரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை குண் டுக்கட்டாக தூக்கி காவல் துறை வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத் தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
இதேபோல் டில்லியின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து அரியானா முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் போராட் டம் நடத்தினர். போராட்டத் தில் ஈடுபட்டவர்கள் பா.ஜனதா அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.