அஞ்சல் வாக்குகளை மீண்டும் எண்ணிட உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை,மார்ச் 27- கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றியை எதிர்த்து திமுக தொடர்ந்த தேர்தல் வழக் கில், நிரா கரிக்கப்பட்ட 605 அஞ்சல் வாக்குகளை உயர் நீதிமன்ற பதிவாளர் தலை மையில் மீண்டும் எண்ண உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் நடை பெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக சார் பில் செங்குட்டுவனும், அதிமுக சார்பில் அசோக் குமாரும் போட்டியிட் டனர்.
இதில், அசோக்குமார் 794 வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பின ராக தேர்வு செய்யப்பட் டார்.
இதை எதிர்த்து திமுக வேட்பாளர் செங்குட் டுவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
அதில், அசோக்குமார் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே 605 அஞ்சல் வாக்குகளை செல்லாது எனக்கூறி தேர்தல் அதிகாரி நிராக ரித்து விட்டார்.
இதற்கான காரணங் களை தெரிவிக்கவில்லை. எனவே தேர்தல் அதிகாரி யின் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற பதிவாளரை நியமித்து அவர் முன்னிலையில் அஞ்சல் வாக்குகளை மீண்டும் எண்ண வேண் டும், எனக் கோரியிருந் தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக் குரைஞர் ரிச்சர்ட்சன் வில்சன், 605 அஞ்சல் வாக்குகளை தேர்தல் அதிகாரி போதிய காரண மின்றி நிராகரித்துள் ளார்.
இதுதொடர்பாக போட்டியிட்ட வேட்பா ளர்களுக்கு தகவல் தெரி விக்கவில்லை.
குறைந்த வாக்கு வித்தி யாசத்தில் அதிமுக வேட் பாளர் வெற்றி பெற்றுள் ளதால், நிராகரிக்கப் பட்ட 605 வாக்குகளையும் உயர் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் எண்ண வேண்டும் என வாதிட் டார்.
அதையடுத்து நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்த உத் தரவில் கூறியருப்பதா வது:
கிருஷ்ணகிரி தொகுதி சட்டப் பேரவைத் தேர்த லில் நிராகரிக் கப்பட்ட 605 அஞ்சல் வாக்குக ளையும் ஒரு மாத காலத் துக்குள் உயர் நீதிமன்ற பதிவாளர் தலை மையில், தேர்தல் ஆணையம் நிய மிக்கும் இரு தேர்தல் அதிகாரிகள் மற்றும் அதிமுக, திமுக வேட் பாளர்களின் முன்னிலை யில் மீண்டும் எண்ண வேண்டும்.
அது தொடர்பான அறிக்கையை உயர்நீதி மன்ற பதிவாளர் நீதிமன் றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத் தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.