பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடாக மாற்றிய பா.ஜ.க.! – காங். குற்றச்சாட்டு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி,மார்ச் 27- இந்தியாவை பெண்க ளுக்கு பாதுகாப்பில்லாத நாடாக பாஜக மாற்றி யுள்ளது என்று காங் கிரஸ் குற்றஞ்சாட்டியுள் ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட் டுள்ளதாவது,
கடந்த 2014 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான மோடி ஆட்சி யில், பெண்களுக்கு எதி ராக சுமார் 35 லட்சம் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் சிறார்கள் பாலியல் துன் புறுத்தலுக்கு உள்ளான போக்சோ சம்பவங்களும் இரட்டிப்பாகி உள்ளன. அத்தகைய சம்பவங் களின் எண்ணிக்கை கடந்த 2017-ஆம் ஆண்டில் 32,600-ஆக இருந்தது.
இது 2022-ஆம் ஆண்டு 63,400-ஆக அதிகரித்துள் ளது. நிதிநிலை அறிக்கை யில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட் டுத் துறைக்கான நிதியை சத்தமில்லாமல் ஒன்றிய அரசு குறைத்து வருகிறது.

கடந்த 2013-ஆம் ஆண்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டங் களை அமல்படுத்த அப் போதைய ஒன்றிய காங் கிரஸ் அரசு ‘நிர்பயா நிதி’-அய் உருவாக்கியது.
ஆனால் 2022-ஆம் ஆண்டு வரை, அந்த நிதி யில் வெறும் 33 சதவீதத் தைதான் மோடி அரசு பயன்படுத்தியுள்ளது.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷ ணின் பாலியல் துன்புறுத் தலுக்கு எதிராகப் போரா டிய மல்யுத்த வீராங்கனை களை மோடி அரசு கொடூ ரமாக ஒடுக்கியது. பில்கிஸ் பானுவை பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கி யவர்களை பாஜக அரசு விடுதலை செய்தது.

அதைச் சட்டவிரோ தம் என்று உச்ச நீதிமன்ற மும் தெரிவித்தது. இந் தியாவை பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடாக பாஜக மாற்றியுள் ளது.
பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெண்க ளுக்கு எதிராக குற்றம் நடைபெற்றால் கொதித் தெழும் ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, எதிர்க்கட்சிகள் ஆட்சிபுரியாத மாநிலங்க ளில் பெண்களுக்கு எதி ராக நடைபெறும் குற்றங் கள் குறித்து மவுனம் காக்கிறார் என்று குற்றஞ்சாட்டினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *