கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

26.3.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என நாங்குநேரி பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும்; தமிழர்களை வெறுக்காத ஒருவர் பிரதமர் ஆக வேண்டுமென்றால் பிரதமர் மோடியை தோற்கடித்தாக வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தேர்தல் பத்திரத்தில் பாஜகவின் தில்லுமுல்லுகளை திசை திருப்பவே அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கை என்கிறார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* திரிபுரா வழக்குரைஞர்கள் (பார்) அசோசியேஷன் தேர்தலில் பாஜக குழு தோல்வி. மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என காங்கிரஸ், சி.பி.அய். (எம்) கருத்து.
தி இந்து:
* பெண்களுக்கு எதிரான கொடுமைகள் 2 மடங்கு உயர்வு: மோடி ஆட்சியில் 35 லட்சம் பாலியல் வழக்குகள்! தோல்விகளை பட்டியலிட்டு காங்கிரஸ் கடும் விமர்சனம்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* தமிழ்நாட்டுக்கான பேரிடர் நிவாரண நிதியை தர மறுக்கும் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக வழக்கு: உச்சநீதி மன்றத்தில் தொடரப் போகிறோம்; நாங்குநேரி பிரசாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
* தமிழ்நாட்டில் பாஜகவை தோற்கடியுங்கள். கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை டெபாசிட் இழக்குவகையில் தோற்கடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அரி பரந்தாமன் வாக்காள பெருமக்களுக்கு வேண்டுகோள்.
தி டெலிகிராப்:
* அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற முழக்கத் துடன் இந்தியா கூட்டணி தலைவர்களின் மாபெரும் பேரணியை மார்ச் 31இல் டில்லியில் நடத்திட முடிவு.
* போல் சர்வே.டாப்’ என்ற இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டு பரிசு அறிவித்துள்ள பாஜக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு திமுக புகார் கடிதம் எழுதியுள்ளது. கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களுக்கு போனஸ்/பரிசு வழங்குவது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு சமம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
* தேர்தல் பதாகையில் ஹிந்து கடவுளின் படத்தை பயன் படுத்தியதற்காக ஒன்றிய இணை அமைச்சர் முரளீதரனுக்கு எதிராக சிபிஅய்(எம்) தேர்தல் ஆணையத்தில் புகார்.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *