ஜே.என்.யூ. மாணவர்கள் யூனியன் தேர்தல் 4 இடங்களிலும் இடதுசாரி கட்சி வெற்றி

viduthalai
1 Min Read

புதுடில்லி, மார்ச் 25- டில்லி யில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் யூனியன் தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்தது. இதில், இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப் பின் வேட்பாளர் அய்ஷே கோஷ் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், 4 ஆண்டுகள் இடைவெ ளிக்கு பின்னர், ஜவகர் லால் நேரு பல்கலைக்கழ கத்தில் (ஜே.என்.யூ.) மாணவர்கள் யூனியன் தேர்தல் நடந்தது. கடந்த 22.3.2024 அன்று நடந்த இந்த தேர்தலில், 4 இடங்களி லும் இடதுசாரி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதில், தலைவர் தேர்த லில் இடதுசாரி கட்சியை சேர்ந்த தனஞ்செய் என் பவர் வெற்றி பெற்றார்.
இவர், ஏ.பி.வி.பி. கட்சியின் உமேஷ் சந்திர அஜ்மீராவை வீழ்த்தி 2,598 வாக்குகளுடன் வெற்றி பெற்றவராக அறிவிக்கப் பட்டார். ஜே.என்.யூ. தேர் தல் கமிட்டி தலைவர் சைலேந்திர குமார் இந்த தகவலை வெளியிட்டார். இதன்படி, உமேஷ் 1,676 வாக்குகள் பெற்றார்.
இதேபோன்று, இடதுசாரி கட்சியின் அவிஜித் கோஷ் 2,409 வாக்குகள் பெற்று துணை தலைவராக வெற்றி பெற்றார்.
பொதுச் செயலாளர் தேர்தலில், 2,887 வாக் குகள் பெற்று பிரியான்ஷி ஆர்யா வெற்றி பெற்றார். இணை செயலாளராக 2,574 வாக்குகள் பெற்று மோ சஜித் வெற்றி பெற்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *