பெரம்பலூரில் தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு வெற்றி குறித்து, ஆலோசனைக் கூட்டம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெரம்பலூர், மார்ச் 25- பெரம்பலூர் மாவட்டத் தில் உள்ள தி.மு.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா தலைமையில் 23.3.2024 அன்று நடைபெற்றது.
கூட்டத்தில், பெரம்ப லூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.வேட் பாளர் அருண் நேரு, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடு பட வேண்டும் எனவும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் அனை வரும் முழு அர்ப்பணிப் போடு செயல்பட்டு வெற்றிக்காகப் பாடு பட வேண்டும் என்றும் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா ஆலோசனை கூறினார்.

இக்கூட்டத்தில் தி.மு.க. வைச் சேர்ந்த பொறுப்பா ளர்கள் மாவட்ட பொறுப் பாளர் ஜெகதீசன், சட்ட மன்ற உறுப்பினர் பிரபா கரன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் துரைசாமி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அட்சய கோபால், வழக்குரைஞர் ராஜேந்திரன், பொதுக் குழு உறுப்பினர்கள் முகுந்தன், அண்ணா துரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், அழகு.நீல மேகம், ‌மாவட்ட அவைத் தலைவர் நடராஜன், மாவட்ட துணைச் செய லாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், நல்லதம்பி, மதிய ழகன், ஒன்றிய பொறுப் பாளர் டாக்டர்.வல்ல பன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அரிபாஸ்கர் (எ) ஆதவன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட மாணவர் அணி அமைப் பாளர் தங்க.கமல் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *