தேர்வு
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு நாளை (26.3.2024) தொடங்குகிறது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
அனுமதி
ஒன்றிய அரசு சார்பில், மானிய விலையில் விற்பனை செய்யப்படும் பாரத் அரிசி, கோதுமை மாவு ஆகியவற்றை ரயில் நிலையங்களில் விற்பனை செய்ய ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
பயிற்சி
சிறு-குறு-நடுத்தர தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யத்தின் சார்பில், ஏற்றுமதி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தொடங்குவது குறித்து இளைஞர்களுக்கு ஏப்ரல் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் சென்னை கிண்டியில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தொடர்புக்கு: 044-22501529.
தேர்வு
இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஅய்அய்) தென்னிந்திய தலைவராக கோவையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஆர்.நந்தினி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வாக்காளர்
தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒளிப்பட வாக்காளர் சீட்டு வழங்குவதற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்குவது என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
எச்சரிக்கை
திறந்த நிலை மற்றும் இணையவழி படிப்புகளில் சேரும் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை வழிமுறைகளை யுஜிசி வெளியிட்டு உள்ளது.https://deb.ugc.ac.in/ என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மின்சாரத்தை…
ஒன்றிய அரசின் சூரியசக்தி திட்டத்தின் கீழ் வீடுகளின் மேற்கூரையில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கணக்கிட 8,000 இருவழி மீட்டர்கள் வாங்க தமிழ்நாடு மின்வாரியம் முடிவு.
இணையதளத்தில்…
பொதுமக்கள் தங்கள் பகுதியில் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளைhttps://ihip.mohFw.gov.in/cbs/army// இணையதளத்தில் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு பொதுசுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
செய்திச் சுருக்கம்
Leave a Comment