தலைமைத் தேர்தல் ஆணையரிடம் தி.மு.க.
அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் மனு!
சென்னை, மார்ச் 24- மதத்தை அடிப்படை யாகக் கொண்டு வாக்குச் சேகரிக்கும் பிரதமர் நரேந்திர மோடி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலைமைத் தேர்தல் ஆணையரிடம் தி.மு.கழகம் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்துள்ளார்.
அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத் தில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சேலத்திற்கு வருகை தந்திருந்தார்.
அப்போது அவர் பேசும்போது, இந்தியா கூட்டணி மீண்டும் மீண் டும் வேண்டும் என்றே இந்துக்களுக்கு எதிராக நடந்துகொள்வதாகவும், இந்து மதத்திற்கு எதிராக பேசி வருவதாகவும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்து மதத்தை கடுமையாகத் தாக்கி வருவதாகவும் பேசி வருகிறார்.
இதை எப்படி நாங்கள் தாங்கிக்கொள்வது? இதை எப்படி அனுமதிப் பது?
மதம், இனம், மொழி இவைகளுக்கு எதிராக பேசுவது, உணர்வுகளை பிரதிபலிப்பது தவிர்க் கப்பட வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 123 (3ஏ) தெளிவாக குறிப்பிட் டுள்ளது.
இதையே பொதுத் தேர்தலுக்கான நெறி முறைகளும் தெரிவிக் கிறது.
இப்படிப்பட்ட நிலையில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியிருப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் தேர்தல் நெறிமுறைக ளுக்கு முற்றிலும் எதி ரான ஒன்றாகும். உயர் பதவியில் இருந்து கொண்டு ஒரு மதத்தின் அடிப்படையில் வாக்கு சேகரிப்பது தவறான அறிகுறியாகும்.
எனவே இந்தியத் தேர்தல் ஆணையம் உடனடியாக இதில் தலையிட்டு இதுபோன்ற மதம், இனம், மொழி ஆகியவற்றை அடிப் படையாகக் கொண்டு வாக்குசேகரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
எனவே எங்களின் இந்தப்புகாரின் அடிப்படையில் இந்தியத் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனி யும் அவ்வாறு நிகழாமல் சட்டத்தின் அடிப்படை யில் செயல்பட தேவை யான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள் கிறேன்.
இவ்வாறு தி.மு.க. சார்பில் அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ்.பாரதி தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.